தற்போது, திபெத்தின் லாசா நிலைமை, அடிப்படையில் நிதானமாகி, சமூக ஒழுங்கு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என்று 10வது சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவரும், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வளர்ச்சி ஆலோசனைக் குழுவின் கௌரவத் தலைவருமான Re Di நேற்று பெய்சிங்கில் தெரிவித்தார்.
தற்போது, லாசாவிலுள்ள நிறுவனங்கள், பள்ளிகள், கடைகள், தொழிற்சாலைகள் ஆகியவை, இயல்பாக செயல்படத் துவங்கியுள்ளன என்று அவர் கூறினார்.
திபெத்தின் வளர்ச்சி, எந்த காலத்திலும் நிதானத்தை முன்னிறுத்தியே அமைய வேண்டும். நிதானம் இல்லா விட்டால், திபெத்திலுள்ள பல்வேறு தேசிய இன மக்களுக்கு மகிழ்வான வாழ்க்கை இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.
|