• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-20 09:14:35    
தியன் தான் பூங்கா(ஈ)

cri

தியன் தான் பூங்கா மன்னர்கள் செர்க்கத்தை வணங்கும் ஓர் ஆலயமாகும். வடக்கேயுள்ள அமைப்பு, "நல்ல அறுவடைக்கான பிரார்த்தனை மண்டபம்" ஆகும். அதற்குத் தெற்கே, பேரரச சுவர்க்கக் கவிதை மாடமும் வட்ட முடிப் பலிபீடமும் இருக்கின்றன. மேலிருந்து பார்த்தால் பூங்காச் சுவரின் தெற்குப் பகுதி சதுரமாகவும், வடக்குப் பகுதி அரை வட்டமாகவும் தோன்றுகின்றன.


இந்தப் பலிபீடமானது, பேரரச சுவர்க்கக் கவிகை மாடம் கட்டப்பட்ட 1530ஆம் ஆண்டிலேயே அமைக்கப்பட்டது. பின்னர் 1749ல் சிங் வம்சத்தின் சியன் லுங் ஆட்சிக்காலத்தில் மறு சீரமைக்கப்பட்டது. அது உருவாகி ஆண்டுகள் பல கழிந்தாலும் அதன் வெளித்தோற்றம் இன்றும் கண்ணாடி போல் பளபளப்பாக இருக்கிறது. அதில் எவ்வித வெடிப்போ காயமோ ஏற்பட்டதாக இல்லை.


பேரரசர்கள் அங்கு வழிபாட்டுக்கு வரும் போது அவர்களின் ஆயிரக்கணக்கான பரிவாரங்களும் கூட வருவது வழக்கம் என்றும், அவர்கள் வருகை, ஒரு கண்கொள்ளாக் காட்சி என்றும் கூறப்படுகிறது.
நுழைவுச் சீட்டு விலை: அதிக பயணிகள் உள்ள சுற்றுலாக் காலம் : 30 யுவான், பயணிகள் குறைவான காலம் : 20 யுவான் (மாணவர்களின் நுழைவுச் சீட்டு விலை:அரை விலை)
பூங்கா திறக்கப்படும் நேரம் : காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை