கலை.........வணக்கம் நேயர்கள். கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். திமிழன்பன்........இப்போது சீனாவில் 11வது சீன தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத் தொடரும் நடைபெற்றுவருகின்றன. கலை.........ஆமாம். இந்த முறை மக்களின் அக்கறையையும் கவனத்தையும் ஈர்க்கும் விடயம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? திமிழன்பன்.........தெரியும். கலை.........அப்படியிருந்தால் சொல்லுங்கள். திமிழன்பன்.........நீங்கள் கேளுங்கள்.
மார்ச் 8ம் நாள் விறுவிறுப்பான சூழ்நிலையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத் தொடரின் ஒலியாகும். கலை.........ஆமாம். இந்தக் கூட்டத் தொடரில் மாநாட்டில் 5 உறுப்பினர்கள் கலந்து கொள்வது மக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது. திமிழன்பன்.........அவர்கள் யார். சமூக சக்திகளைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றார்கள்? இது பற்றி விளக்கம் சொல்லுங்கள். கலை.........மகிழ்ச்சி. அவர்கள் கடந்த 30 ஆண்டுகளில் சீனாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்பு பணியில் வளர்ந்த புதிய சமூக தடிடாபி பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்களாவர். திமிழன்பன்.........புதிய சமூகத்தட்டு என்றால் என்ன அர்த்தம்? கலை.........1978ம் ஆண்டு முதல் சீனாவில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்பு கொள்கை நடைமுறைக்கு வந்த பின் சமூகத்தின் பொருளாதார அம்சங்கள, அமைப்பு வடிவம், வேலை வாய்ப்பு வடிவம், விநியோக வடிவம் முதலிய பல்வகை தன்மைகள் காணப்பட்டுள்ளன? திமிழன்பன்.........இந்த பல்வகை தன்மை வாய்ந்த நலனை எப்படி அனுபவிக்க முடியும் கலை.........வெளிநாடுகளில் கல்வி முடித்து கொண்டு நாடு திரும்பியவர்கள் உள்ளிட்டவர்கள் இந்த சீர்திருத்தத்தினால் ஏற்பட்ட நலன்களை அனுபவித்துள்ளனர். திமிழன்பன்.........அவர்கள் முக்கியமாக எந்த துறைகளில் பணிபுரிகன்றனர்? கலை.........சீனப் பொருளாதாரம் சமூக வாழ்க்கை ஆகியவை இடம் பெறும் பல துறைகளை அவர்கள் தேர்வு செய்து வேலை செய்கிறார்கள். திமிழன்பன்........8ம் நாள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்திக்கும் கூட்டத்தில் அவர்கள் எப்படி கருத்து தெரிவித்தார்கள்? கலை.........சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் புதிய உறுப்பினர் wang jian lin அரசுசாா தொழில் நிறுவனங்களின் கருத்தை தெரிவிக்கிறார்.
திமிழன்பன்........சமூக கடப்பாடு அனைத்து தொழில் முனைவோர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய பொது பிரச்சினையாகும். இதனை செயல்படுத்த வேண்டும். கலை.........அடுத்து உறுப்பினர் xu guan ju கூட்டத் தொடருக்கு கொண்டு வந்த கருத்துரு தொழில் நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டிய சமூக கடப்பாடாகும். அவருடைய கருத்தை கேளுங்கள்.
திமிழன்பன்........கூட்டத் தொடரில் நான் முன்வைக்கின்ற ஒரு கருத்துரு தொழில் நிறுவனங்கள் சமூக கடப்பாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டிய வரையறை அமைப்பு முறையின் கட்டுமானத்துடன் தொடர்புடையது. இதன் கட்டுமானத்தின் மூலம் சோஷலிச இணக்க சமூகத்தை கட்டியமைப்பதை முன்னேற்றுவதற்கு தொழில் நிறுவனங்கள் பங்கு ஆற்றலாம். 1 2
|