ச்சினான் நகரிலுள்ள இந்திய உணவகம்
cri
சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள சான் துங் மாநிலத்தின் ச்சினான் நகரில், இந்திய உணவகம் ஒன்று உள்ளது. நாள்தோறும் இங்கு வந்து இந்திய உணவுக்களை சுவைக்கின்ற விருந்தினர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இன்று, எங்களோடு இணைந்து, மல்லிகை என்னும் இவ்வுணவகத்தில் நுழைந்து, அங்குள்ள தனிச்சிறப்பான தென்னாசிய நடையுடை பாவனைகளை உணர்ந்து கொள்ள இருக்கின்றீர்கள்.
இவ்வுணவகத்தில் நுழையும் போது, இந்திய வாசனையுள்ள புகை, கறிமசாலா ஆகியவற்றின் மணம் வீசுகின்றன. சுவர் முழுவதும், இந்திய மற்றும் பாகிஸ்தானின் காட்சி படங்களும், தபால் தலைகளும் ஒட்டப்பட்டுள்ளன. தொலைக்காட்சியில், இந்திய பெண்கள் நடனம் ஆடும் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். உபசரிப்பவர், இந்திய பாணியிலான சட்டைகளை அணிந்திருக்கின்றனர். பயணிகள், இங்கு அமர்ந்த போது, பண்டைய மர்மமான இந்திய நடையுடை பாவனைகளை அறிந்து கொள்ளலாம். பலஸ்தீனரான சாடி அபு சார்குவா, உணவகத்தின் முன்னாள் உரிமையாளரும், தற்போதைய உரிமையாளரின் நல்ல நண்பருமாக இருக்கிறார். இவ்வுணவகத்தைத் திறப்பது பற்றிய துவக்க ஆலோசனை பற்றி, அவர் கூறியதாவது: என்னுடைய பல நண்பர்கள், பாகிஸ்தான் அல்லது இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் ச்சினான்னில் சொந்த ஊரின் உணவுப்பொருட்களை வசதியாக சாப்பிட முடியாததைப் பார்த்ததால், இந்த இந்திய உணவகத்தை நடத்துகின்றேன் என்றார் அவர். தற்போது, சாடி, சான்துங் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்றார். நான்கு ஆண்டுகளுக்கு முன் அவர் ச்சினான் வந்த போது, சீன வறுவல்கள் அவருக்குப் பிடித்திருந்ததால், இவ்வுணவகத்தைத் திறந்து வைத்தார். இப்பொழுது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நண்பர்களைத் தவிர, வேறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் பலர், அடிக்கடி வருகை தருகின்றனர். ச்சினானில் நீண்டகாலமாக தங்கியுள்ளதால், சாடிக்கு, படிப்படியாக சீன வறுவல்களைப் பிடிக்கிறது. பண்டைய சீனப்பண்பாடு, அவரை ஆழமாக ஈர்த்துள்ளது. அவர் கூறியதாவது: எனக்கு சீனப்பண்பாட்டை மிகவும் பிடிக்கிறது. சீனாவின் பண்பாட்டையும் பொருளாதாரத்தையும் கற்றுக்கொள்ள சீனாவுக்கு வந்தேன் என்றார் அவர். வெளிநாட்டவர் சீனாவில் வணிகத்தில் ஈடுப்பட்டால், கொள்கைகளில் பல முன்னுரிமைகளை அனுபவிக்கலாம். அதனால், இவ்வுணவகம் மேன்மேலும் வரவேற்கப்பட்டு வருகிறது. ச்சினானில், காலநிலை சீரானது, நகரத்தின் சுற்றுச்சூழல் தூய்மையானது. மக்கள் நட்பார்ந்து உள்ளனர். இங்கு நீண்டகாலமாக வாழ அவர் விரும்புகிறார். அவர் மேலும் கூறியதாவது: இங்கு, வசதியாக வாழ்கின்றோம். சீனாவில் இப்பொழுது வணிகப்பொருட்கள் மிகவும் அதிகமாகும். வெளிநாடுகளில், 90 விழுக்காட்டு பொருட்கள், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சோப்பாஃ, தொலைகாட்சி பெட்டி, கணிணி முதலியவை, சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. நான், பிரான்ஸில், 2 ஆண்டுகளும், பிரிட்டனில், 6 ஆண்டுகளும், ரஷியாவில் 6 திங்களும் வாழ்ந்துள்ளேன். சீனா வந்தடைந்த பின், எனது உணர்வு மிகவும் நன்றாக இருக்கிறது என்றார் அவர். சாடி, ச்சினானில் மகிழ்ச்சியாக வாழ்ந்து, பல நண்பர்களை கொண்டுள்ளனர். ஆறு திங்கள் காலத்திற்கு முன், அவருடைய பாகிஸ்தான் நண்பர் நவேட், இவ்வுணவகத்தை இயக்க துவக்கி, இணை உரிமையாளராக மாறியுள்ளார். அண்டை நாடுகளான பாகிஸ்தானும் இந்தியாவும், ஒரே உணவு வழக்கத்தைக் கொண்டுள்ளன. அதனால், நவேட், இந்திய உணவகத்தை சரியாக நிர்வகிக்கலாம். அவர் கூறியதாவது: பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ முதலிய மாநகரங்களில், இந்திய உணவகம்கள் மிகவும் அதிகம். ஆனால், ச்சினானில், இந்திய மற்றும் பாகிஸ்தான் வறுவல் சுவையுடைய உணவகங்கள் இல்லை. அமெரிக்கா, பிரிட்டன் முதலிய நாடுகளின் விருந்தினர்கள், எமது உணவகத்துக்கு வந்து இந்திய உணவு வகைகளை உண்ண விரும்புகின்றனர் என்றார் அவர்.
 மல்லிகை என்னும் இவ்வுணவகம் பயன்படுத்துகின்ற சாஸ்களும் சில மூலப்பொட்களும் இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. விருந்தினர்கள் இங்கு சுவையான இந்திய வறுவல்களைச் சாப்பிடலாம். அதில், தனிச்சிறப்பியல்புடைய கறிமசாலா, குறிப்பிடத்தக்கது. மிகவும் வரவேற்கப்படுகின்றது என்று நவேட் அறிமுகப்படுத்தினார். உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்துவதோடு, தலைச்சிறந்த சேவையையும், இவ்வுணவகம் வழங்குகிறது. சீன விருந்தினர்களின் தேவைக்கேற்ப, காரமான மற்றும் காரமற்ற இரண்டு வகைகளான வறுவல்களை, இவ்வுணவகம் வழங்குகிறது. தற்போது, வெளிநாட்டவர் மட்டுமல்ல, சீன விருந்தினரின் எண்ணிக்கையும் மேன்மேலும் அதிகமாகி வருகிறது.
 சான்துங் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பாகிஸ்தான் மாணவர் யோசபுஃ, மல்லிகை உணவகத்துக்கு அடிக்கடி சென்று, சாப்பிடுகின்றார். படிப்படியாக நவேட்டுடன் நெருங்கிய நண்பராகவும், அவர் மாறியுள்ளார். சொந்த ஊரின் வறுவல்களைச் சாப்பிட விரும்புகின்ற போது, இவ்வுணவகத்துக்கு அவர் வருகின்றார் என்று யோசபுஃ கூறினார். ச்சினானில் வாழ்வது, தமது சொந்த ஊரில் வாழ்வதை போன்றது. சீன நண்பர்களோடு அளவளாவ விரும்பும் போதும், சீன உணவுகளைச் சுவைக்க விரும்பும் போதும், வீட்டை நினைக்கின்ற போதும், இவ்வுணவகத்துக்கு வருகின்றேன் என்றார் யோசபுஃ. அவர் கூறியதாவது: ச்சினாவிலான வாழ்வு, நன்றாகவும் வசதியாகவும் இருக்கிறது. நகரவாசிகள் அன்பாக உள்ளனர். வாய்ப்பு இருந்தால், நான் சீனாவில் முழுவதுமாக வாழ விரும்புகின்றேன் என்றார் அவர்.
|
|