• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-20 19:39:38    
வன்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களின் ஆத்திரம்

cri

மார்ச் திங்கள் 14ம் நாள் சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் லாசா நகரில் தலாய்லாமா குழுவால் தூண்டப்பட்டு சில கோயில் மத துறவிகள் வேண்டுமென்றே குவிந்து வன்செயல்களை உருவாக்கியதால் அங்கு இயல்பான சமூக ஒழுங்கு கடுமையாக சீர்குலைக்கப்பட்டது. லாசா நகரவாசிகளின் உயிர் மற்றும் சொத்துப் பாதுகாப்புக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டது. தன்னாட்சி பிரதேச அரசு உடவுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வன்செயல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் படி தடுத்துள்ளது. தற்போது லாசாவிலுள்ள சமூக ஒழுங்கு இயல்பாகியுள்ளது.

வன்செயல்களை நேரில் பார்த்தவர்கள் அதை பற்றி எமது செய்தியாளர்களிடம் விளக்கி கூறினர். லாசா நகரின் ஹை சன் துவக்க பள்ளியின் தலைமையாரிசியர் நிமாஸ்ரன் இது பற்றி விவரித்தார். அவர் கூறியதாவது சட்டத்தை மீறிய வன்முறையாளர்கள் எங்கள் பள்ளி கட்டிடத்தைத் தாக்கினர். அத்துடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உயிர் மற்றும் பள்ளியின் உடைமைகளுக்கான பாதுகாப்பை கடுமையாக அச்சுறுத்தினர். நாங்கள் மாணவர்களை வகுப்பறைகளில் இருக்கச் செய்து ஆசிரியர்களை உடனடியாக அணிதிரட்டினோம். அதேவேளையில் பெற்றோர்களுக்கு சுற்றறிக்கை விடுத்து அன்றிரவு தத்தமது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கோரினோம். இந்த வன்செயல்களால் எங்கள் பள்ளிக்கு 14 இலட்சம் யுவான் இழப்பு ஏற்பட்டது. இழப்புகளில் முக்கியமானது எங்கள் மாணவர்களின் மன்கள் ஆழமாக புண்படுத்தப்பட்டதே என்று அவர் கூறினார்.

அன்று நிகழ்ந்த வன்செயல் பற்றி மீளாய்வு செய்யும் போது இரண்டாவது வகுப்பில் கல்வி பயில்கின்ற மாணவி டாவாயுச்சன் அந்த வன்முறை சம்பவத்தை நினைத்து இன்று வரை நான் இன்னும் பயந்தேன் என்று கூறினார். அவர் கூறியதாவது. வன்செயல்கள் நிகழ்ந்த போது சிலர் காவற்துறையினரை தாக்கின்ர். வேறு சிலர் கடைகளை நொறுக்கின்ர். நான் மிகவும் பயந்து போனேன். பள்ளிக்கு போகாமல் வீட்டில் இருக்க எனது பாட்டி கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் மூன்று நாட்கள் பள்ளிக்கு போகாமல் வீட்டிலே இருந்தேன் என்று அவர் கூறினார். மார்ச் திங்கள் 14ம் நாள் நிகழ்ந்த வன்செயல்களில் தீவிரவாதிகள் 210 க்கும் அதிகமான வீடுகளையும் கடைகளையும் தீயிட்டு நாசமாக்கினர். 13 அப்பாவி மக்கள் தீயில் கருதி உயிரிழந்தனர் அல்லது கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர். லாசாவின் முக்கிய சாலைகளில் நாசபடுத்தப்பட்ட வணிக பொருட்கள் காணப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்களில் fong bi xia அம்மையார் அழுது கொண்டே தீவிரவாதிகளால் தான் தாக்கப்பட்டதை எடுத்து கூறினார். அவர் கூறியதாவது 14ம் நாள் பிற்பகல் நான் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தேன். உடனடியாக கதவை மூடுங்கள் என்று அண்டை வீட்டினர் என்னை அவசரபடுத்தினார். வீட்டு பணியாளர் ஒருவர் 5வயதான திபெத் இன குழந்தையை பள்ளிக்கு அனுப்ப சென்ற போது எனது வீட்டில் அடைக்கலம் தேடி நுழைந்தார். குழந்தை மிகவும் பயந்து கொண்டிருந்தது. என்னை காபாற்றுங்கள். நான் பத்திரமாக வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் என் கணவரை கெஞ்சி கேட்டுக் கொண்டான். எனது கணவர் அவர்களை பாதுகாப்பாக அனுப்ப வெளியே அழைத்து வந்தவுடன் கற்களால் அடிக்கப்பட்டார்கள். நாங்களும் பிரிக்கப்பட்டோம் என்று அவர் கூறினார். லாசாவிலுள்ள மருத்துவ மனையின் சிகிச்சையறையில் தாக்கப்பட்ட peng xiao po எங்கள் செய்தியாளரை பார்த்ததுடன் அழுந்தார். அவர் கூறியதாவது எனக்கு ஒரு தங்கை உண்டு. 18 வயதான அவள் அப்போது வீட்டில் இருந்தார். வீடு முழுதும் தீபற்றி எரிந்த போது மரத் துண்டுகள் முழுதும் பெருஞ்சுவாலையுடன் எரியத் தொடங்கின. வேறு வழியில்லை. ஜன்னல் மூலம் வெளியே தப்பி ஓட அவருக்கு துணிவு இல்லை. எரிந்து கொண்டு வந்த மர ஏணி படிகள் உடைந்தன. அவர் தீயில் வீழ்ந்து கருதி இறந்தார் என்று அவர் அழுகையோடு கூறினார். உடன் பிறப்புகள் மரணமடைந்த நிலைமை கண்டு லாசா மக்கள் மிகவும் ஆத்திரமடைந்தனர்.

சட்டத்தை அத்துமீறியவர்களின் வன்செயல்களும் திபெத் சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டன. இதுவரை இந்த வன்செயல்களில் பாதிக்கப்பட்ட மக்கள் திபெத்தின் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்போது லாசா நகரின் முக்கிய பகுதிகளிலும் சாலைகளிலும் பல்வகை வாகனங்களின் போக்குவரத்து இயல்பாகி வருகின்றன. பெரும்பாலான கடைகள் தங்கள் வியாபாரத்தை மீட்டுள்ளன. உயர் நிலை கல்வி நிலையங்களிலும் இடைநிலை மற்றும் துவக்க பள்ளிகளிலும் மாணவர்கள் கல்வி பெறுகின்றனர். லாசாவின் சமூக ஒழுங்கு அடிப்படையில் அமைதிக்கு திரும்பியுள்ளது.