• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-20 18:48:09    
திபெத் பிரச்சினை

cri

சில நாடுகள், திபெத் பிரச்சினையை கொண்டு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியைப் புறக்கணிப்பதை, பல்வேறு நாடுகளின் செய்தி ஊடகங்கள் ஆக்கப்பூர்வமாக கவனம் செலுத்தின.

அண்மையில் சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான லாசாவில் நிகழ்ந்த அடிதடி, சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்களால், சமூக உறுதிப்பாடு, சீனாவின் உரிமைப் பிரதேச ஒருமைப்பாடு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஆகியவைச் சீர்குலைக்கப்படுவதற்குப் பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் Haque நேற்று இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானிலுள்ள சீன தூதர் Luo Zhaohuiஐச் சந்தித்துரையாடிய போது, இவ்வாறு தெரிவித்தார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை சீர்குலைப்பது, முழு உலக மக்களுக்கும் சீனருக்கும் இழப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

தலாய் லாமா குழு, சீனாவுக்கு எதிரான சர்வதேசச் சக்திகளுடன் கள்ளத்தனமாககூட்டுச் சேர்ந்து, நாட்டைப் பிளவுபடுத்தி, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை சீர்குலைப்பதை வன்மையாகக் கண்டித்தன என்று தென் கொரியாவிலுள்ள வெளிநாடுகளில் வாழ்கின்ற சீன மக்கள் குழுவினர் இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறினர்.