சர்வதேசச் சமூகம், தலாய் லாமா குழுவின் பிரிவினை தன்மையை தெரிந்துகொள்ள வேண்டும். அவரது பிரிவனை நடவடிக்கைகளுக்கு எந்த நிலைமையிலான ஆதரவுகளையும் வழங்க கூடாது என்று சீனா விருப்பம் தெரிவித்தது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சின் காங் இன்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான லாசாவில் நிகழ்ந்த அடிதடி, சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்கள், தலாய் லாமா குழுவின் பிரிவினை தன்மையை மீண்டும் கோடிட்டுக்காட்டின. இந்நடவடிக்கைகள் தோல்வியுறுவது உறுதி என்று சின் காங் கூறினார்.
சீன அரசு சர்வதேச அளவில் பொறுப்பேற்கும் அரசாகும். உலக அமைதி மற்றும் வளர்ச்சியை வலுப்படுத்த சீன அரசு எப்பொழுதும் பாடுபட்டு வருகின்றது என்றும் அவர் கூறினார்.
|