அண்மையில், லாசாவில் நிகழ்ந்த, சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்களை, சீன அரசு சட்டப்படி கையாள்வதை சர்வதேசச் சமூகம் ஆதரித்துள்ளது. மேலும், திபெத் சுதந்திரம் என்ற பிரிவினை நடவடிக்கைகளை எதிர்த்து, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அரசியல் மயமாக்குவதை எதிர்ப்பதாகவும் தெரிவித்தது.
நாட்டு நிதானம், உரிமைப் பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிக்காத்து, நல்லிணக்கச் சமூகக் கட்டுமானத்தை முன்னேற்றுவதற்காக சீனா மேற்கொண்ட நடவடிக்கைகளை, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி முஷாரவ் பிரிவு உறுதியாக ஆதரிக்கிறது. இது, சீனாவின் நிதானத்துக்குத் துணை புரிவது மட்டுமல்ல, தெற்காசியப் பிரதேசப் பாதுகாப்புக்கும் முக்கிய உத்தரவாதமாகும் என்று பாகிஸ்தான் செனெட் அவையின் வெளிவிவகாரக் கமிட்டித் தலைவரும், முஸ்லீம் லீக் கட்சியின் முஷாரவ் பிரிவின் தலைமைச் செயலாளருமான Mushahid நேற்று கூறினார்.
சீன நாட்டின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டுக்கும், திபெத் பிரச்சினை பற்றிய சீனாவின் கொள்கைக்கும், செர்பிய அரசு மதிப்பு அளிக்கிறது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை கூறியது.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் புறக்கணிக்கும் முயற்சி எதுவும், பயனற்றது என்று ஆஸ்திரேலிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் குழுவின் துணைத் தலைவர் Harvey தெரிவித்தார். திபெத் மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளைப் பயன்படுத்தி, தனியொரு நபர் மற்றும் குழுக்கள் முன்வைத்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் புறக்கணிப்பது என்ற கருத்து குறித்து, எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது, அவர் இவ்வாறு கூறினார்.
திபெத்துடன் தொடர்புடைய அனைத்து பிரச்சினைகளும், சீனாவின் உள் விவகாரங்களாகும். சீனாவின் இறையாண்மை மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாடு சீர்குலைக்கப்படக் கூடாது. சீன அரசு சட்டப்படி, திபெத்தின் பாதுகாப்பு ஒழுங்கை உத்தரவாதம் செய்து, சமூகத்தின் நிதானத்தையும் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் நிலைநிறுத்த முடியும் என்று வியட்நாம், இந்தியா, மெளரித்தானியா, ஐவரிகோஸ்ட், பிராசவில் காங்கோ முதலிய நாடுகள், நம்பிக்கை தெரிவித்தன.
|