Dalai Lama உடனான பேச்சுவார்த்தை பற்றிய நடுவண் அரசின் நிலைப்பாடு, நிலையானது தெளிவானது மாற்றம் ஏதுமில்லை. கூறப்படுகின்ற திபெத் சுதந்திரம் பற்றிய கருத்தை உண்மையாகக் கைவிட்டு, தாய்நாட்டைப் பிளவுப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் முற்றாக நிறுத்த வேண்டும் என்று நடுவண் அரசு, Dalai Lamaவுக்குக் கோரிக்கை விடுக்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் qin gang நேற்று தெரிவித்தார். Dalai Lamaவைப் பொறுத்தவரை, அவரது கூற்றுகளைக் கேட்க முடியாது. முக்கியமாக, அவரது நடவடிக்கைகளை நாம் காண வேண்டும். அண்மையில் நடைபெற்ற சம்பவங்கள், இதை நிரூபித்துள்ளன. பேச்சுவார்த்தைக்கான நிலைமையை உருவாக்கும் வகையில், Dalai Lama முற்றாக முழுமையாகத் தற்சோதனை செய்ய வேண்டும் என qin gang கூறினார். Dalai Lama தனிப்பட்ட ஒரு மதவாதி அல்ல, தாய்நாட்டைப் பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசியல் நாடோடி ஆவார். அண்மையில் லாசா நகரில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் தலாய் லாமா குழுவின் பிரிவினைத் தன்மையை மீண்டும் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளன என்று qin gang தெரிவித்தார்.
|