சீன வெளியுறவு அமைச்சர் yang jiechi நேற்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரைஸ் அம்மையாருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். சீன-அமெரிக்க உறவு பற்றியும், பொது அக்கறை வாய்ந்த பிரச்சினைகள் பற்றியும், இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
அண்மையில் லாசாவில் நிகழ்ந்த அடிதடி, சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்களின் உண்மை நிலையை, yang jiechi ரைஸிடம் அறிமுகப்படுத்தினார். சமூக நிதானம், நாட்டின் சட்ட அமைப்பு முறை, திபெத்திலான பல்வேறு தேசிய இன மக்களின் அடிப்படை நலன் ஆகியவற்றைப் பேணிகாக்க சீனத் தரப்பு மேற்கொண்ட நடவடிக்கைகளை, நீதியின் பக்கம் நிற்கும் அனைத்து நாடுகளும் புரிந்துணர்ந்து ஆதரிக்கும் என்று yang jiechi நம்பிக்கை தெரிவித்தார்.
|