சீனாவின் லிசு இன மக்கள், முக்கியமாக, யுன்னான் மாநிலத்தின் weixi லிசு இனத் தன்னாட்சி மாவட்டத்தில் கூடி வாழ்கின்றனர். வேறு சிலர், யுன்னான் மாநிலத்தின் lijiang, baoshan, diqing முதலிய இடங்களிலும், Sichuan மாநிலத்தின் xichang, yanyuan முதலிய மாவட்டங்களிலும் சிதறி வாழ்கின்றனர். இவ்வினத்தின் மக்கள் தொகை, 5 இலட்சத்து 74 ஆயிரமாகும்.

லிசு இனத்துக்கு சொந்த மொழி உண்டு. அது, சீன-திபெத் மொழி குடும்பத்தின் திபெத்-மியான்மார் கிளையைச் சேர்ந்தது. லிசு இனத்துக்கு அதிகமான இலக்கியம் உண்டு. புராண கதைகளும், பண்டைக்கால செவிவழி கதைகளும், லிசு இன வரலாற்றை ஆய்வு செய்யும் உரிய தரவுகள் மட்டுமல்ல, சீன நாட்டுப்புற இலக்கியத்தின் கருவூலத்திலுள்ள மதிப்புள்ள ஒரு பகுதியும் ஆகும். இவ்வினத்தின் கவிதைகள் தாளலயத்துக்கு முக்கியத்துவமளிக்கின்றன.

லிசு இன மக்கள், இயற்கையிலான மலர், பறவையின் குரல் முதலியவற்றின்படி, ஒரு ஆண்டு காலத்தை 10 திங்களாகப் பிரித்தனர். இந்த 10 திங்கள், பூ, பறவை, பசி, சேகரிப்பு, அறுவடை, மதுபான தயாரிப்பு, வேட்டை, புத்தாண்டுக் கொண்டாட்டம், வீட்டின் கட்டுமானம் ஆகியவையாகும்.
ஹன் இனத்தின் வசந்த விழா போன்ற kuoshi விழா, ஜூன் திங்களிலான தீப்பந்த விழா, அக்டோபர் திங்களிலான அறுவடை விழா, நிலா விழா ஆகியவை, லிசு இன மக்களின் முக்கிய விழாக்களாகும்.
லிசு இன மக்கள், மக்காச்சோளத்தையும், qiaomai என்ற கோதுமையையும் உட்கொள்கின்றனர். ஆண்களும் பெண்களும் நன்றாக மதுபானம் அருந்துகின்றனர்.

அனர்களின் வீடுகள், மரக் கட்டமைப்பு அல்லது மூங்கில் கட்டமைப்பில் கட்டியமைக்கப்பட்டன.
லிசு இன மக்கள், முக்கியமாக வேளாண்துறையில் ஈடுபடுகின்றனர். மக்காச்சோளம், நெல், qiaomai என்ற கோதுமை ஆகிய தானியங்களைப் பயிரிடுகின்றனர்.
லிசு இன மக்கள், ஆதிகால மதத்தை பின்பற்றுகின்றனர் இயற்கையை வழிபாடு செய்கின்றனர். சிலர், கிறிஸ்தவ மதத்தில் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.
|