• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-21 09:06:53    
அமெரிக்கக் கூடைப்பந்து மன்றங்களுக்கிடை போட்டி

cri
அமெரிக்கத் தொழில் முறை கூடைப்பந்து மன்றங்களுக்கிடை போட்டி 17ம் நாள் தொடர்ந்து நடைபெற்றது. புகழ் பெற்ற சீன வீரர் யோ மீன்னை கொண்ட Houston Rockets அணி 104-92 என்ற புள்ளிக்கணக்கில் Los Angeles Lakers அணியைத் தோற்கடித்து, மேற்கு பகுதி மன்றங்களுக்கிடையே முதலாவது இடம் பெற்றுள்ளது.
இப்போட்டியின் வெற்றி மூலம், Houston Rockets அணி தொடர்ந்து 22வது முறையாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

2007-2008 ஆண்டுக்கான இத்தாலி கால்பந்து மன்றங்களுக்கிடை முதல் தர போட்டியின் 28வது சுற்று ஆட்டங்கள் 17ம் நாள் முடிவடைந்தன. மன்றங்களு்ககிடை போட்டியில் முதலாவது தரவரிசை Inter Milan அணி, அதன் வீரர்களான, Vieira, Jimenez ஆகியோர் அடித்த 2 கோல்களால், Palermo அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
தற்போது, 67 புள்ளிகளைப் பெற்ற நிலைமையில், Inter Milan அணி மன்றங்களுங்கிடை போட்டியில் முதலிடம் வகிக்கின்றது.
2008ம் ஆண்டு சியோல் சர்வதேச மரத்தான் ஓட்டப்போட்டி 16ம் நாள் தென் கொரியாவின் தலைநகரான சியோலில் நடைபெற்றது. சீன வீராங்கனை Zhang Shujing மகளிர் பிரிவின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

சீன வீராங்கனை Zhang Shujing 2 மணி நேரம் 26 நிமிடங்கள் 11 வினாடிகள் என்ற காதனையுடன், இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளார். சியோ சர்வதேச மரத்தான் ஓட்டப்போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் 3வது முறையாக பெற்றுள்ளார். சீன வீராங்கனை Wang Xueqin இப்போட்டியின் இரண்டாவது இடம் பெற்றுள்ளார்.
அமெரிக்க ஒலிம்பிக் அமைப்பு குழுவின் கருத்து
அமெரிக்க பிரதிநிதி குழு, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை புறக்கணிப்பது, தவறான கருத்தாகும் என்று அமெரிக்க ஒலிம்பிக் அமைப்பு குழு Denver நகரில் 17ம் நாள் மீண்டும் தெரிவித்தது.
அசோஷயேடிட் செய்தி நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது அமெரிக்க ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் செய்தி தொடர்பாளர் Seibel இவ்வாறு தெரிவித்தார். சீனா, ஒலிம்பிக் விளையாட்டுப்

போட்டியை நடத்துவதால் ஏற்படும் நன்மைகள், மென்மேலும் அதிகமாக வெளியிடப்படும் என்று அமெரிக்க ஒலிம்பிக் அமைப்பு குழு கருத்துவதாக அவர் கூறினார்.
கடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை போன்று, அமெரிக்க பிரதிநிதி குழு, உபசரிப்பு நாட்டிற்கு விருந்தினராக இருக்கும். உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் வீரர்கள் மற்றும் இரசிகர்களை வரவேற்கும் வகையில், பெய்ஜிங் அரசு செய்துள்ள எல்லா முயற்சிகளுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம் என்றார் அவர்
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அரசியல் மயமாக்க வேண்டாம் என்று அமெரிக்க ஒலிம்பிக் அமைப்பு குழுவின் தலைவர் ueberroth அண்மையில் தெரிவித்தார்.