• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-21 09:12:09    
சீனர் ஒருவரின் மனைவி Dedbiligவின் வாழ்வு

cri

இன்றைய நிகழ்ச்சியில், "சீனர் ஒருவரின் மனைவி Dedbiligவின் வாழ்வு பற்றி" கூறுகின்றோம். அறிவிப்பாளர்
வட சீனாவின் உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் Erenhot நகரில், மங்கோலிய நாட்டைச் சேர்ந்த வணிகர் Dedbilig, சீனர் ஒருவரின் மனைவி. சீன-மங்கோலிய நாட்டின் வர்த்தகத்துறையில் அவர் புகழ் பெற்றவர். இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார வர்த்தக பரிமாற்றத்தை விரைவுபடுத்த, அவர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார். முந்தைய நிகழ்ச்சிகளில் சீன மகளிர் ஒருவர் பற்றி அறிமுகப்படுத்தினோம். இன்றைய நிகழ்ச்சியில், சீனர் ஒருவரின் மனைவி Dedbiligயை பற்றி கூறுகின்றோம்.

அவருக்கு வயது 36. 17 வயதான போது, மங்கோலிய நாட்டின் அரசு திட்ட படி, அவர் சீனாவுக்கு வந்து, கிழக்கு சீனாவில் உள்ள ஷாங்காய் அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் தொழிற்துறை மற்றும் மின்னியல் துறையில் கற்று தேர்ந்தார். 1992ஆம் ஆண்டு அவர் தனது படிப்பை முடித்தார். அப்போது, சீனாவின் சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணி, புதிய வளர்ச்சி கால கட்டத்தில் நுழைந்திருந்தது. சீனச் சமூகத்தின் வளர்ச்சிக்கு உள்ளார்ந்த ஆற்றல் உண்டு என்று அவர் உணர்ந்து கொண்டார். அவருடன் சீனாவில் கல்வி பயின்ற மங்கோலிய நாட்டின் மாணவர்கள் நாடு திரும்பினர். ஆனால் Dedbilig சீனாவில் வாழ முடிவு செய்தார்.
கிழக்கு சீனாவின் Zhe Jiang மாநிலத்தின் Wen Zhou நகருக்கு சென்ற அவர் முதலில் ஒரு மின்சார பொத்தான் தொழிற்சாலையில் வேலை செய்தார். திங்கள்தோறும் ஆயிரம் யுவானை அவர் ஈட்டினார். பணம் ஈட்டுவதால் ஏற்படும் மகிழ்ச்சியை உணர்ந்தாலும், இன்னல்மிக்க வாழ்க்கையை அவர் அனுபவித்தார்.
சுறுசுறுப்பான வேலையினால், சீனாவில் Dedbiligவின் வாழ்க்கை படிப்படியாக சீரானது. ஆழமான பண்பாடுகள் கொண்ட சீனாவை அவர் நேசித்தார். சீனாவில் உள்ள இயற்கை காட்சிகள், பழக்க வழக்கங்கள், வளர்ச்சிக்கான உள்ளார்ந்த ஆற்றல்கள் ஆகியவற்றைக் கண்டு, அவருக்கு சீனாவை விட்டுப் பிரிய மனமில்லை. ஆனால், தனது தாய்நாட்டின் மீதான நினைவு அவருக்கு வந்தது. இறுதியில் அவர் நல்ல வழிமுறையை சிந்தித்து, வட சீனாவில் உள்ள Erenhot நகருக்குச் செல்ல தீர்மானித்தார்.
Erenhot நகர், உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மங்கோலிய நாட்டை ஒட்டியமைந்துள்ள ஒரே ஒரு இருப்புப்பாதை நுழைவாயில் அதுவாகும். மங்கோலிய நாடு, ரஷியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சந்தையை எதிர்நோக்குகின்றது. உள் மங்கோலியத் தன்னாட்சி பிரதேசம் மற்றும் சீனாவின் முக்கிய ஏற்றுமதி இறக்குமதி பொருட்களின் விநியோக மையமாகும். சீனாவையும் மங்கோலிய நாட்டையும் இணைக்கும் இந்நகரில் வாழ்வது, தமக்கு மிகவும் பொருதமானது என்று அவர் கருதுகின்றார். அவர் கூறியதாவது:


"மங்கோலிய நாட்டின் அரசு, சீனாவுக்கு வர என்னை அனுப்பா விட்டால், தற்போது நான் இன்னும் ஏழை ஆயராக இருந்திருப்பேன். Erenhot நகர், மங்கோலிய நாட்டை ஒட்டியமைந்துள்ளதால், இங்கு எனது தாய்நாட்டுடன் நான் தொடர்பு கொள்ளலாம். எனது தாய்நாட்டுக்காகவும் நான் பங்காற்றலாம்" என்றார், அவர்.
இந்நகரில் குடிபெயர்ந்த துவக்க காலத்தில், மொழியிலான தமது மேம்பாட்டைக் கொண்டு, சீன, மங்கோலிய வணிகர்களுக்கு அவர் மொழிபெயர்ப்பு சேவை புரிந்தார். பின்னர், இரு நாடுகளுக்கிடையே அவர் வியாபாரம் செய்ய தொடங்கினார். தனது இலட்சியத்தின் வளர்ச்சியுடன், நிறுவனம் ஒன்றை அவர் தாமாகவே திறந்து வைத்தார். தாது பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதியில் இந்நிறுவனம் ஈடுபடுகிறது. அப்போது, தலைசிறந்த சீன இளைஞர் ஒருவரை அவர் சந்தித்தார். பின்னர், Dedbilig அவரை திருமணம் செய்தார். சீனா, அவரின் புகுந்த நாடாக மாறியது.
இதற்குப் பின், Erenhot நகரின் புவிநிலை மேம்பாடு, சீனாவுக்கும், மங்கோலிய நாட்டு்க்கும் இடையே தமது சிறப்பான தகுநிலை ஆகியவற்றைக் கொண்டு, இரு நாடுகளின் கூட்டு வளர்ச்சிக்காக மேலும் பல முயற்சிகளை மேற்கொள்ள துவங்கினார். அவருடைய அறிமுகம் மூலம், சீனாவின் பல தொழில் நிறுவனங்கள் மங்கோலிய நாட்டுக்குள் நுழைந்து, நெடுஞ்சாலை கட்டுமானம், வீடு மற்றும் நில உடைமைத்துறையின் வளர்ச்சி, கட்டிடப் பொருட்களின் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளன. இரு நாடுகளுக்கிடை பொருளாதார வர்த்தகப் பரிமாற்றத்துக்கு வழி வகுத்ததுடன், Erenhot நகரின் சந்தை வளர்ச்சியைப் பாதிக்கும் சில பிரச்சினைகளையும் Dedbilig கண்டுபிடித்தார். அவர் கூறியதாவது: 

"முன்னதாக, மங்கோலிய நாட்டின் பல வணிகர்கள், Erenhot நகருக்கு வந்து வெவ்வேறான சரக்குகளைப் பார்த்து வாங்கி சென்றனர். ஆனால் கடந்த ஆண்டு முதல், இந்த வணிகர்களில், 80 விழுக்காட்டினர், சீனாவின் பிற மாநிலங்களுக்குச் சென்று பொருட்களை கொள்முதல் செய்துள்ளனர்" என்றார், அவர்.
அதன் பிறகு, அன்றாட வாழ்க்கையிலும், வியாபாரத்திலும், Erenhot நகரின் பொருளாதார சூழல் மீதான மதிப்பீடு பற்றி மங்கோலிய நாட்டு வணிகர்களிடம் அவர் முன்முயற்சியுடன் கேட்டறிந்து, இந்நகரின் சந்தை பற்றிய இவ்வணிகர்களின் கருத்துக்களைத் திரட்டினார். கடந்த ஆண்டு ஏப்ரல் திங்கள், Erenhot நகரின் அதிகாரி Zhang Guo Huaவுக்கு கடிதம் ஒன்றை அவர் அனுப்பினார். அதில் Erenhot நகரின் சந்தையை, மங்கோலிய நாட்டின் வணிகர்கள் கைவிட்ட காரணங்களை தொகுத்ததோடு, தீர்வுகளையும் முன்வைத்திருந்தார்.
இக்கடிதம் கிடைத்த பின், Dedbilig முன்வைத்த பிரச்சினைகளுக்கு Zhang Guo Hua மிகவும் முக்கியத்துவம் அளித்தார். Erenhot நகர அரசு கூட்டத்தில் இப்பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. இப்பிரச்சினைகள் பற்றி Zhang Guo Hua கூறியதாவது:

"Dedbilig, Erenhot நகரில் பல்லாண்டுகளாக வசித்து வருவதால், அவர் இந்நகர் பற்றி ஒப்பீட்டளவில் புரிந்து கொண்டுள்ளார். கடிதத்தில் அவர் முன்வைத்துள்ள பிரச்சினைகளில், சில எங்களுக்கு தெரியும். மற்றவை தெரியாது. மங்கோலிய நாட்டவர் என்ற முறையில், வர்த்தகத்தில் ஈடுபடுவதால், அவர் குறிப்பிட்ட, மங்கோலிய நாட்டின் வணிகர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் மிக முக்கியமானவை" என்றார், அவர்.
கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பிரச்சினைகள் பற்றி, தொடர்புடைய வாரியங்கள் தீர்வு முறையை நாடி, பயன் தரும் நடவடிக்கை மேற்கொண்டு, அன்னிய வணிகர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் என்று Zhang Guo Hua கோரினார். Dedbiligக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பியதோடு, அவரை Erenhot நகரின் உற்பத்தி பொருள் தரக் கண்காணிப்பாளராக அமர்த்த வேண்டும் என்று Zhang Guo Hua விருப்பம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: 


"அவர் உணர்வுபூர்வமாகவும், பொறுப்புணர்ச்சியுடனும் வேலை புரிகின்றார். இரு நாடுகளுக்கிடை வர்த்தகத் தொடர்பும் இரு நாட்டுறவும் மேலும் வளர்ச்சியடைய விரும்புகின்றார். சீன-மங்கோலிய வர்த்தகம் மேலும் வளர்ந்து, சீன-மங்கோலிய நட்புறவு மேலும் ஆழமாவதற்கு அவர் பாடுபட்டு வருகின்றார்" என்றார், அவர்.
தமது கருத்துக்களில் Erenhot நகர அரசு பெரிதும் கவனம் செலுத்துவதைக் கண்டு, Dedbilig மிகவும் மிகழ்ச்சி அடைகின்றார்.
தற்போது, Dedbiligவின் நிறுவனத்தின் அலுவல், ரஷியாவுக்கு விரிவாகியுள்ளது. சீனா, மங்கோலியா, ரஷியா ஆகிய மூன்று நாடுகளிடையே அவர் பணி அழுத்தங்களோடு இருப்பதால், தனது குடும்பத்தைப் பராமரிக்கும் நேரம் அவருக்கு இல்லை. அவரின் இரட்டை மகள்களின் வயது 11. அவர்கள், அம்மாவின் பணியை மிகவும் ஆதரிக்கின்றனர். மகள் ஒருவர் கூறியதாவது: 

"அம்மா இரவு தான் வீடு திரும்புகின்றார். அவரின் இத்தகைய பணி, இரு நாடுகளுக்கிடை வர்த்தகத்தையும், இரு நாட்டுறவையும் விரைவுபடுத்த துணை புரியும் என்று கருதுகின்றேன். வளர்ந்த பின், அம்மாவுக்கு உறுதுனையாக பணிகளில் அதிக ஆதரவளிக்க வேண்டும் என்று விரும்புகின்றன்" என்றார், அவர்.
சிறு வயதில் தமது ஊரை விட்டு, வெளியூரில் ஓய்வின்றி வேலை செய்வதால், காதல் மற்றும் குடும்பத்தினரின் அன்புக்கு மேலும் முக்கியத்துவம் அளிப்பதாக Dedbilig கூறினார். வெளியூரில், தமது குடும்பத்தினரை நினைத்து, தாம் மிகவும் இன்பமடைவதாக அவர் கூறினார்.
தற்போது, Dedbilig உற்சாகம் நிரம்பியுள்ளார். சீனர் ஒருவரின் மனைவியாக மாறியதால் தமக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமது தாய்நாடான மங்கோலியாவிலும், புகுந்த ஊரான சீனாவிலும் மனிதர் மதிப்பை நனவாக்குவதற்கு இது துணை புரியும் என்று அவர் கருதுகின்றார்.