• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-21 19:08:30    
லாசாவிலான வன்முறை பற்றிய உண்மைகள்

cri

மார்ச் திங்கள் 20ம் நாள் சீன அரசுத் தொலைகாட்சி நிலையத்தின் மூலம் மார்ச் 14ம் நாள் லாசாவில் நிகழ்ந்த அடிதடி, சீர்க்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும தீயால் நாசப்படுத்தல் போன்ற வன்முறை செயல்கள் பற்றிய விளக்க திரைப்படம் காண்பிக்கப்பட்டது, சாதாரண பொது மக்களும் பல அப்பாவி மக்களும் வன்செயல்களால் தாக்கப்பட்டனர். சாலைகளின் பக்கத்தில் அமைந்திருந்த பல கடைகளும் கட்டிடங்களும் தீவிரவாதிகளால் தீயால் எரிக்கப்பட்டு நாசப்படுத்தப்பட்டவை அனைத்தும் இவ்விளக்க திரைப்படத்தில் காட்டப்பட்டது

 மார்ச் திங்கள் 14ம் நாள் காலை சில மத துறவிகள் ரொமோச் மொனாஸ்டரி கோயிலிருந்து காவல் பணியில் ஈடுபட்ட காவற்துறையினரை கற்களால் தாக்கினர். பின் சில வன்முறையாளர்கள் சாலையில் ஒன்று கூடி தாய்நாட்டை பிரிப்பது போன்ற முழக்கங்களை எழுப்பினர். அத்துடன் கட்டுப்பாடற்ற முறையில் அடிதடி, சீர்க்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசப்படுத்தல் போன்ற வன்முறை செயல்களை மேற்கொண்டனர். லாசா நகரின் மையத்தில் தீ வைக்கப்பட்டது. பெரும் அங்காடிகள் வணிக மையங்கள், உணவகங்கள் அடுத்தடுத்து தீயால் பற்றி எரிய தொடங்கின.

ஓர் ஆடை கடையில் பணிபுரிந்த 5 இளம் பெண்களில் 4 பேர் தீயிலிருந்து தப்பிக்க முடியாமல் கருதி உயிரிழந்தனர். ச்சோமா என்பவர் இந்த கடையிலிருந்து உயிருடன் தப்பித்தவர் தான். அப்போதைய நிலைமையை மீளாய்வு செய்த போது அவர் கூறியதாவது எங்கள் கடையின் கதவு கண்ணாடியால் தயாரிக்கப்பட்டது. வன்முறையாளர்கள் கண்ணாடி கதவை அடித்து முழுமையாக உடைத்தனர். நாங்கள் எல்லோரும் பயத்தால் அழுந்தோம். காலை மகிழ்ச்சியுடன் கடைக்கு வந்தோம். திடீரென இந்த வன்முறை செயல்கள் நிகழ்ந்தன. அதை நினைக்கவே பயமாக இருக்கிறது என்று அவர் கூறினார். வன்செயல்கள் நிகழ்ந்த போது சாலையில் இயந்திர மிதிவண்டியில் சென்ற ஆண் நபர் சட்டத்தை மீறியவ கும்பலால் தடுக்கப்பட்டார். அவர் தலையில் கற்களால் அடித்தனர். அவருடைய வலது கண் தாக்கப்பட்டதால் கண்பார்வை இழந்தார். இடது காது வெட்டப்பட்டது.

அவரை காப்பாற்ற முன்வந்த மருத்துவர்களும் தாக்கப்பட்டனர். லாசா மக்கள் மருத்துவ மனையில் பணிபுரிகின்ற ரோசாஸ்ரன் அவ்வாறு தாக்கப்பட்டு காயமடைந்தார். அவர் கூறியதாவது  சாலையில் நாங்கள் மக்களை காப்பாற்ற முயன்ற போது நாங்கள் மருத்துவர்கள் என்று விளக்கி கூறியபோதும் வன்முறையாளர்கள் பொருட்படுத்தாமல் எங்கள் வாகனத்தை சீர்குலைத்தனர். எங்கள் பணியாளர்களை தாக்கினர் என்று அவர் கூறினார். லாசாவில் மின்சார மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள், வங்கிகள், மருத்துவ மனைகள், இடைநிலை மற்றும் துவக்க பள்ளிகள் ஆகியவை கடுமையாக நாசப்படுத்தப்பட்டன. தீவிரவாதிகள் லாசா நகரின் இரண்டாவது இடை நிலை பள்ளியில் நுழைந்து அதன் வளாகத்திலுள்ள பொருட்களை தீயால் எரித்தனர். தீயணைப்பாளர்கள் தீயை அணைக்க முயன்ற போது வன்முறையாளர்கள் அவர்களை தாக்கினர். அப்போது இரண்டு தீயணைப்பு வண்டிங்கள் முழுமையாக நாசப்படுத்தப்பட்டன. நான்கு தீயணைப்பாளர்கள் கடுமையாக காயமுற்றனர்.

திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் அரசு அதிகாரி பாட்மா ஸ்லிங் இது பற்றி விளக்கி கூறும் போது இம்முறை நிகழ்ந்த அடிதடி, சீர்க்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும தீயால் நாசப்படுத்தல் போன்ற வன்முறை செயல்கள் தலாய்லாமா குழுவால் சதிசெய்யப்பட்டு நடந்துள்ளதை விளக்க ஆதாரபூர்வ உண்மைகள் அதிகமாக இருக்கின்றன என்று கூறினார் தலாய்லாமா குழு பல்வகை வழிமுறைகளின் மூலம் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் சில மத துறவிகளுடன் தொடர்பு கொண்டது. அக்குழு பல்வேறு வழி முறை மூலம் திபெத்திற்கு கட்டளையிட்டது. உண்மைகள் தெரியாத பொது மக்களை இந்த வன்முறை செயல்களில் ஈடுபடத் தூண்டியது என்று அவர் கூறினார். மார்ச் திங்கள் 19ம் நாள் இரவு 10 மணி வரை லாசாவில் வன்செயல்களில் ஈடுப்பட்ட 170 தீவிரவாதிகள் காவற்துறை ஆணையத்திற்கு வந்து குற்றங்களை ஏற்றுக் கொண்டனர். தற்போது லாசா நகரின் முக்கிய பிரதேசங்களிலும் சாலைகளிலும் பல்வேறு இடங்களில் வாகனங்களின் போக்குவரத்து மீட்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகள் வியாபாரத்தை மீட்டுள்ளன. உயர் கல்வி நிலையங்களிலும் இடைநிலை மற்றும் துவக்க பள்ளிகளிலும் மாணவர்கள் வகுப்பில் படிக்கின்றனர். லாசாவிலான சமூக ஒழுங்கு அடிப்படையில் இயல்புக்கு திரும்பியது.