அண்மையில், சீனாவின் Gan Su மாநிலத்திலான Gan Nan பிரதேசத்தில், சிலர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர். உள்ளூர் கடைகள் மற்றும் அரசின் பணி இடங்கள் மீது அவர்கள் தாக்குதல் தொடுத்தனர்.
சீனத் தேசிய தொலைக்காட்சி நிலையம் நேற்று இதை அறிவித்தது. நாட்டை பிளவுபடுத்தும் வாசகங்களை முழங்கி, கற்களையும் தாமாக தயாரித்த எரி குண்டுகளையும் வீசியதோடு, கூறப்படும் திபெத்தின் நாடோடி அரசின் கொடியை அசைத்ததோடு, அரச நிறுவனங்கள், மருத்துவ மனைகள், பள்ளிகள், கடைகள் ஆகியவற்றில் நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்று அறியப்படுகிறது. உள்ளூரின் சில காவற்துறையினர்களும் அரசுப் பணியாளர்களும் இதில் காயமுற்றனர்.
இச்சம்பவம் குறித்து Gan Su மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் 19ம் நாள் பேசுகையில், இச்சம்பவம், லாசா நகரில் நிகழ்ந்த கடும் வன்முறை நடவடிக்கையுடன் நெருக்கமாக தொடர்புடையது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, அமைதி, நிதானம் ஆகியவற்றை சீர்குலைத்து, நாட்டை பிளவுபடுத்தும் வகையில், தலாய் லாமாவின் குழுவினர் இதை முன்கூட்டியே திட்டமிட்டனர் என்று கூறினார். மார்ச் 10ம் நாள் முதல், திபெத் சுதந்திரத்துடன் தொடர்புடைய பிரச்சார வெளியீடுகள் Gan Nan பிரதேசத்தில் பரவத் தொடங்கின. அப்போது, லாசா நகரில் சில கோயில்களில் மதத் துறவிகள் வேண்டுமென்றே குவிந்து வன்செயல்களை உருவாக்கினர் என்றும் அவர் தெரிவித்தார்.
வன்முறை சம்பவங்களுக்கு பின், உள்ளூர் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமூக ஒழுங்கையும் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளையும் பாதுகாத்துள்ளது. காவற்துறையினர் தமது கடமையை செயல்படுத்துகையில் இயன்ற அளவிலான கட்டுப்பாட்டுடன் இருந்து, சட்ட படி, வன்முறை சம்பவத்தை கையாண்டனர். தற்போது, உள்ளூர் சமூக ஒழுங்கு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
தவிரவும், 16ம் நாள் சீன தென்மேற்கு பகுதியிலான Si Chuan மாநிலத்தின் A Ba திபெத் இனத் தன்னாட்சி சோவில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தன என தெரிய வருகின்றது.
|