வாழும் புத்தர்களின் கண்டனம்
cri
கடந்த சில நாட்களாக சீனாவின் திபெத் தலைநகரான லாசாவில் நிகழ்ந்த வன்முறை நிகழ்ச்சி குறித்து சீனாவின் சிங்காய் மாநிலத்திலுள்ள டார்ஸ் கோயிலின் வாழும் புத்தர்களும் மிக பல மத துறவிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். லாசாவிலான வன்செயல்களை உண்டாக்கிய சில மத துறவிகள் தேசிய சட்ட விதிகளை அத்துமீறினர். அதேவேளை புத்த மத விதிகளையும் அத்துமீறினர். மத துறவிகள் புத்த மத திருமறைகளின் படி உயிர் கொலை செய்ய கூடாது. வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது. ஆனால் சிலர் இந்த மத விதிகளை அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் இப்படியே செயல்படுவதற்கு தப்பிக்க வழியே இல்லை. மக்களின் ஆதரவை பெற முடியாது என்று வாழும் புத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
|
|