• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-22 18:44:48    
சர்வதேச ஆதரவை பெற்ற சீன அரசின் நடவடிக்கை

cri

அண்மையில் சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான லாசாவில் நிகழ்ந்த அடிகடி, சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்முறை குற்றச்செயலைத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தொடர்புடைய வாரியங்கள் சட்டப்படி கையாண்டுள்ளன. சீன அரசின் நடவடிக்கைகள் மீது சர்வதேச சமூகம் புரிந்துணர்வையும் ஆதரவையும் தெரிவித்தது.

வன்முறை நிகழ்ச்சி

லாசா நகரில் நிகழந்த கடும் வன்முறை குற்றச்செயல், திபெத் பிரிவு சக்தியின் தூண்டுதலில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்று வட கொரிய வெளியுறவு அமைச்சக்த்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். திபெத் சுதந்திரத்தை நாடுவதும், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை சீர்குலைப்பதும் பற்றிய திபெத் பிரிவு சக்தியின் சூழ்ச்சியை வட கொரியா வன்மையாகக் கண்டித்ததோடு, திபெத் சமூகத்தின் நிதானத்தையும் சட்ட அமைப்பையும் பேணிக்காத்து, திபெத் மக்களின் அடிப்படை நலனை பாதுகாக்கும் வகையில், சீன அரச மேற்கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஆதரிக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஒரே சீனா என்ற கொள்கையில் எப்போதும் ஊன்றி நிற்பதோடு, திபெத், சீனாவிலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும் என்று மங்கோலியா கருதுவதாக மங்கோலிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மீண்டும் வலியுறுத்தினார்.

தீமூட்டி யெரிக்கப்பட்ட கொடி

நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் பேசுகையில், திபெத், சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும் என்று கூறினார். அமைதி, நிதானம், வளர்ச்சி ஆகியவற்றை நனவாக்குவதற்கான சீனா அரசின் முயற்சிகளை நேபாளம் பாராட்டியது.

திபெத் பிரச்சினை, சீன உள் விவகாரமாகும். சீன அரசின் நிலைப்பாட்டை வங்காளத்தேசம் உறுதியாக ஆதரித்து, ஒலிம்பிகை அரசியல் மயமாக்குவதை எதிர்க்கிறது என்று வங்காளத்தேச வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் தெரிவித்தார்.

தவிரவும், கஸாக்ஸ்தான், கிர்கிஸ்தான், ஜார்ஜியா, சிரியா, Fiji, செற்பியா, சாம்பியா, Benin முதலிய நாடுகள், ஒரே சீனா என்ற கொள்கையில் உறுதியாக ஊன்றி நின்று, சீன அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.