2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போடியால், சீனாவும் கிரேக்கமும் மேலும் நெருங்கியுள்ளதாக கிரேக்கத்திலுள்ள சீனத் தூதர் லோலின்சுவன் நேற்று ஏதன்ஸில் தெரிவித்தார். கிரேக்கத்திலிருந்து பரவிய ஒலிம்பிக் எழுச்சி, சீனா முன்வைத்த இணக்கமான உலகம் என்ற கருத்துடன் ஒருமனதாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சீனாவும் கிரேக்கமும், மனித குலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய நாகரிகம் கொண்ட பழமான நாடுகளாகும். 21வது நூற்றாண்டின் துவக்கத்தில் ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து நடத்துவது ஆழமான முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால், இரு நாடுகளும் இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஒத்துழைப்பை மேலும் வளர்த்து, பரஸ்பர அரசியல் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, இரு நாட்டு மக்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நட்புறவையும் அதிகரிக்கும் என்று லோலின்சுவன் கூறினார்.
பொருளாதாரம், வர்த்தகம், பண்பாடு, நலவாழ்வு போன்ற துறைகளில், இரு நாடுகளுக்கு சிறந்த பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படை உள்ளது. இரு நாடுகளுக்குமிடையில் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு விசாலமான எதிர்காலமும் உண்டு. மேலும், இது தொடர்ந்து முன்னேற்றமடையும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
|