சட்டத்தில் உறுதியாக நின்று, மக்களை பாதுகாத்து, நிதானத்தை பேணிக்காப்பது என்ற தலைப்பில், சீன மக்கள் நாளேடு இன்று விமர்சனரின் கட்டுரையை வெளியிட்டது. தாய்நாட்டிலிருந்து திபெத்தை பிளவுப்படுத்தும் எந்த செயல்களும் பொது மக்களின் உணர்வைப் புண்படுத்தும். ஆகவே, இத்தகைய செயல்கள் தோல்வியடைவது உறுதி என்று இவ்விமர்சனக் கட்டுரை கூறியது.
அண்மையில் திபெத்தில் நிகழ்ந்த வன்முறை செயல்கள், பொது மக்களின் உயிர் மற்றும் சொத்துக்கு கடும் இழப்பு ஏற்படுத்தின. மேலும், லாசாவின் சமூக ஒழுங்கு மற்றும் நிதானத்தை கடுமையாக சீர்குலைத்தது. இந்நிகழ்ச்சி ஏற்பட்ட பிறகு, சட்டப்படி சீன அரசு விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு, இதை திட்டவட்டமாக கையாண்டுள்ளது.
தலாய் லாமா குழு லாசாவில் அழிவு நடவடிக்கைகளை திட்டமிட்டு, வேண்டுமென்றே தூண்டிவிட்டது என்பது, பல சான்றுகள் கோடிட்டுக்காட்டுகி்ன்றன. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நேரத்தில், சீனாவின் அமைதி மற்றும் ஒற்றுமையான சமூக அரசியல் நிலைமையை சீர்குலைத்து, தாய்நாட்டிலிருந்து திபெத்தை பிளவுபடுத்துவது திபெத் சுதந்திரவாதிகளின் இறுதி நோக்கமாகும் என்று கட்டுரை குறிப்பிட்டது
|