மார்ச் 14ம் நாள் லாசாவில் நிகழ்ந்த வன்முறைச் செயல் பற்றிய உண்மைகளை சீனத் தேசிய சிங்குவா செய்தி நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டது. தலாய் லாமா குழு இந்நடவடிக்கைகளை திட்டமிட்டு, வேண்டுமென்றே தூண்டிவிட்டதைப் பல சான்றுகள் கோடிட்டுக்காட்டுகி்ன்றன என்று செய்தி கூறியது.
இவ்வாண்டின் ஜனவரி திங்கள் 4ம் நாள், தலாய் லாமா குழுவைச் சேர்ந்த 5 தீவிரவாத அமைப்புகள் இணையம் மூலம் திபெத் மக்களின் கிளர்ச்சி இயக்கம் என்ற வேண்டுகோளை விடுத்தன. அதே வேளையில், வெளிநாட்டிலுள்ள திபெதியர் திபெத்தில் நுழையும் இயக்கத்தை, இக்குழு சதிசெய்தது. மார்ச் 10ம் நாள் முதல், இக்குழு தொடர்நத்து பிரிவினை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கி, அவற்றை சதிசெய்தது. மின்னஞ்சல் மற்றும் குறுந்தகடு அனுப்புவது போன்ற பல்வகை வழி முறைகளில், வன்முறைச் செயல்களில் பங்கெடுக்குமாறு மேலதிக பேருக்கு தூண்டிவிடுத்தது.
பாதி நூற்றாண்டு காலத்தில், தலாய் லாமா குழு, திபெத்தில் முரண்பாடுகளை தோற்றுவிக்குமாறு உள் நாட்டிலுள்ள பிரிவினையாளர்களுக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளது.
|