லாசாவிலான வன்முறை பற்றி சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர் என்ற தலைப்பில், பிரிட்டன் டேலிகராப்(telegraph) நாளேடு மார்ச் திங்கள் 18ம் நாள் கட்டுரை வெளியிட்டு, சில பயணிகள் கண்ட வன்முறைச் செயல்களை விளக்கியது.
மேலை நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் லாசாவை வெளியேறி, நேபாளத்தின் தலைநகர் சென்றடைந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை திபெத் துறவிகளின் தாக்குதலை கண்டதை அவர்கள் விளங்கிக் கூறினார்.
லாசாவின் ஜன்ஹாங்(Jokhang) கோயிலுக்கு அருகிலான பார்கோர்(Barkhor) சதுக்கத்தில் ஏற்பட்ட வன்முறைச் செயல்களை பார்த்ததாக ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த 25வயதான கலௌது பல்சிகேர் கூறினார். அவர் கூறியதவாது:
இளைஞர்கள் வன்முறைச் செயல்பட்டனர். அதே வேளையில், முதியவர்கள் முழக்கத்துடன் அவர்களுக்கு ஆதரவு அளித்தனர் என்று அவர் நினைவு கூறினார்.
இந்த வன்முறைச் செயல்களில் ஒருவர் திபெதியரால் தாக்கப்பட்ட பின் உயிரிழந்தார் என்தை கனடாவைச் சேர்ந்த 19வயதான சுற்றுலா பயணி ஜோன் கேன்வூது உறுதிப்படுத்தினார். அவர் கூறியதாவது:
மேலும், ஒரு ஆணின் தலை பெரும் கல்லால் தாக்கப்பட்டது. தாக்குதல் தொடுப்பவர் விட்டு சென்ற பின், அவர் எழவில்லை செய்யவில்லை. கல்கள் நிறைந்த சில பெட்டிகள் காணப்பட்டன. திபெதியர்கள் கல்களால் வழியில் சென்றவர்களை தாக்கினர். இந்த வன்முறைச் செயல் திட்டமிடும் நடவடிக்கையாகும் என்று அவர் கருதுகிறார்.
அன்று வன்முறைச் செயலுக்கு முடிவு வந்த பிற்கு, லாசாவின் பல கட்டிடங்கள் தீயால் நாசமாக்கப்பட்டன. எங்கும் புகை வீசியது. துறவிகள் கலந்த கொண்ட வன்முறை நடவடிக்கையை நான் முன்பு பார்க்கவில்லை என்று அவர் நினைவு கூறினார்.
|