லாசாவில் நிகழ்ந்த கடும் வன்முறை குற்றச்செயலுக்குத் திபெத் தன்னாட்சி பிரதேச அரசு சட்டப்படி தண்டனை விதிப்பதற்கு சர்வதேச சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
மொலிஷஸ் அரசு ஜாக்னா இந்நாட்டிலுள்ள சீனத் தூதரை வரவழைத்து பிரிவினை நடவடிக்கை எந்த நாட்டிலும் ஆதரவு பெற முடியாது என்றும், சீன அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றார் என்றும் கூறினார்.
திபெத் விவகாரம் சீனாவின் உள் விவகாரமாகும். இச்சம்பவம், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன் இணைப்பதை எதிர்க்கின்றரார் என்று மெதகேஸ்கர் வெளியுறவு அமைச்சர் லன்வாஜ், இந்நாட்டிலுள்ள சீனத் தூதரிடம் தெரிவித்தார்.
லாசா வன்முறை நிகழ்ச்சி, தலாய் லாமா குழு ஏற்பாடு செய்த அரசியல் நிகழ்ச்சியாகும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைச் சீர்குறைப்பது இதன் இலக்காகும் என்று புரூண்டி வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், சூடான், சைப்ரஸ், அல்பேனியா, மண்டே நீக்கிரோ, டோமினிக், அன்டிகுவாவும் பாபுதாவும் முதலிய நாடுகளின் அரசுத் தலைவர்கள் அல்லது வெளியுறவு அதிகாரிகள், இந்நிகழ்ச்சியைக் கண்டித்ததுடன், சீன அரசை ஆதரிக்கும் நிலைப்பாட்டையும் தெரிவித்துள்ளனர்.
|