சீனாவின் Gan Su மாநிலத்திலான Gan Nan பிரதேசத்தில் நிகழ்ந்த அடிதடி, சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்களால், காவற்துறையினர் ஆயுதக்காவற்துறையினர், அதிகாரி, பொது மக்கள் உள்ளிட்ட 94 பேர் காயமுற்றதோடு, 23கோடி யுவான் மதிப்புள்ள சொத்து இழப்பு ஏற்பட்டது. Gan Su மாநிலத்தின் Gan Nan திபெத் இனத் தன்னாட்சி சோவின் அரசிரிலிருந்து எமது செய்தியாளர் இதை அறிவித்தார்.
Gan Su மாநிலத்தின் திபெத் மரபுவழி புததமத நம்பிக்கை உயைடரைச் சேர்ந்த மதவாதிகள் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினர். வெளிநாட்டிலான பிரிவிளைவாதிகளும் சட்டத்தை மீறிய வன்முறையாளர்களும், லாசா, Gan Nan, A Ba ஆகிய பிரதேசங்களில் வன்முறை நிகழ்ச்சிகளை உண்டாக்கி, தேசியத்தின் ஐக்கியத்தை சீர்குலைப்பது குறித்து, அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இவ்வழிவு நடவடிக்கையை தலாய் லாமா குழு திட்டமிட்டது. இது, தேசிய இனம் மற்றும் மதம் என்ற பெயரில், மக்களை ஏமாற்றி வருகின்றது என்பது உண்மைகள் எடுத்துக்காட்டுகின்றன என்று சீன புத்த சங்கத்தின் துணை தலைவரும் வாழும் புத்தருமான Ji Muyang தெரிவித்தார்.
தற்போது, Gan Nan பிரதேசத்தின் ஒழுங்கு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தவிரவும், 16ம் நாள் சீன தென்மேற்கு பகுதியிலான Si Chuan மாநிலத்தின் A Ba திபெத் இனத் தன்னாட்சி சோவில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தன. தற்போது, அங்குள்ள நிலைமை அடிப்படையில் அமையாகியுள்ளது. சமூக ஒழுங்கு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகின்றது.
|