கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் உயிரின வாழ்க்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பில், புதிய சாதனைகள் காணப்பட்டுள்ளன. இது வரை, உலகில் சுற்றுச்சூழல் தரம், மிகுந்த இடங்களில் திபெத் ஒன்றாகும்.
2007ம் ஆண்டு, திபெத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒதுக்கீட்டுத் தொகை செலவு, சுமார் 50 கோடி யுவானை எட்டியுள்ளது. இது 2006ம் ஆண்டில் இருந்ததை விட, 30 விழுக்காடு அதிகம். முக்கிய இடங்களிலுள்ள உயிரின வாழ்க்கை பொது நலக் காட்டுக் கட்டுவளத்திற்கான திட்டத்தைச் செயல்படுத்தி, இயற்கையான காட்டுக்கான பாதுகாப்பு, விளைநிலங்களை மீண்டும் காடுகளாக மாற்றுவது, தரிசு நிலங்களை மீண்டும் மேய்ச்சல் நிலங்களாக மாற்றுவது முதலிய கட்டுமானத் திட்டங்கள் ஆக்கப்பூர்வமாகத் தூண்டப்பட்டுள்ளன.
பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் பணியையும், ஆக்கப்பூர்வமாக திபெத் முன்னேற்றி, மிகுந்த எரியாற்றல் செலவு வாய்ந்த மற்றும் கடுமையான மாசுபட்டை ஏற்படுத்தும் தொழில் நிறுவனங்கள் கட்டப்பட தடை விதித்தது, வேளாண் மற்றும் கால்நடைப் பிரதேசங்களில் விறகுக்கட்டைகளின் பயன்பாட்டை குறைத்த புதிய எரியாற்றலைப் பயன்படுத்துகிறது. சிங்காய்-திபெத் இருப்புப் பாதைச் சுற்றுச்சூழல் அளவீட்டு அமைப்பு முறையைக் கட்டியுள்ளது.
|