அண்மையில் சீன பொது மக்கள், சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான லாசாவில் நிகழ்ந்த கடுமையான வன்முறை சம்பங்களில் உயர்ந்த கவனம் செலுத்தி வருகின்றனர். சட்டத்தை மீறிய குற்றங்களைத் தடுப்பது, சமூக ஒழுங்கை மீட்டெடுப்பது ஆகியவற்றிற்குச் சீன அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆதரித்து, சட்டப்படி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
பெரும்பாலான திபெத் இன மக்கள், அமைதியான வாழ்க்கையை எதிர்ப்பார்க்கின்றனர். வன்முறை சம்வங்களில் கலந்து கொண்டவர்கள், பெரும்பாலான திபெத் உடன்பிறப்புக்களை எவ்விதத்திலும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று பெய்சிங்கில் பணி புரிகின்ற திபெத் இளைஞர் ngapoi ganqen puntsok , செய்தியாளரிடம் கூறினார். குற்றவாளிகளின் செயல்கள் பற்றி, வங்கியில் பணி புரிகின்ற fan jingjing கடும் ஆத்திரம் தெரிவித்தார். இந்த வன்முறை சம்பங்களைக் கையாள்வதிலான சீன அரசின் செயல்பாடுகள் மிகவும் தேவையானவை. சமூக நிதானத்தைப் பேணிக்காப்பதே சீன அரசின் கடமையாகும் என்றார் அவர்.
|