• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-24 11:05:45    
புதிய சோஷலிச கிராமப்புறக் கட்டுமானத்திற்கான tianjin மாநகரத்தின் முயற்சி

cri
நகரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு, புதிய சோஷலிச கிராமப்புறத்தைக் கட்டியமைப்பது என்ற நெடுநோக்கு நடவடிக்கையை சீனா முன்வைத்துள்ளது. எழில் மிக்க சுற்றுச் சூழல், தூய்மையான கிராம வீடு, செழுமையான பொருளாதாரம், ஜனநாயக நிர்வாகம் ஆகியவை கொண்ட புதிய கிராமப்புறங்களை சீனா உருவாக்கவுள்ளது.
Tianjin மாநகரத்தின் wuqing மாவட்டம், சீனாவின் வட பகுதியில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இம்மாவட்டம் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருவதன் மூலம் இத்துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
wuqing மாவட்டம், நகரத்தையும் கிராமப்புறத்தையும் இணைக்கும் ஒரு மாவட்டமாகும். இதனால்தான், தற்போது, அதிக கிராமங்கள் கொண்ட இம்மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் வாழ்கின்றனர். நகரத்தையும் கிராமப்புறத்தையும் சரிசம நிலையில் வளர்ச்சியுறச் செய்வதற்கு,2020ம் ஆண்டுக்குள், இம்மாவட்டத்தின் அனைத்து கிராமங்களின் பல்வேறு வளர்ச்சி இலக்குகள், இடைநிலை வளர்ச்சி அடைந்த நாடுகளின் கிராமப்புற வளர்ச்சி நிலையை எட்ட வேண்டும். இதனால்தான், இம்மாவட்டம் மூன்று குறிப்பிடத்தக்கக் குறிக்கோள்களை முன்வைத்துள்ளது. wuqing மாவட்டத்தின் பொறுப்பாளர் wangshupei எளிதான சொற்களால் இக்குறிக்கோள்களை எடுத்துக்கூறினார். அவர் கூறியதாவது:


"2010ம் ஆண்டுக்குள், இலவசக் கல்வியைப் பெறுவது, 2015ம் ஆண்டுக்குள் இலவசச் சிகிச்சையைப் பெறுவது, 2020ம் ஆண்டுக்குள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற முதியோர் உதவித் தொகையைப் பெறுவது" என்பன குறிக்கோள்களில் உள்ளன என்று அவர் கூறினார்.
இலவசக் கல்வியைப் பெறுவது என்பது 2010ம் ஆண்டுக்குள் இம்மாவட்டத்தின் பள்ளிக் கூடங்களில் சேரும் இளம் வயதினர் மற்றும் வயதுவந்தோரும் தொடக்கப் பள்ளியிலிருந்து மேனிலை பள்ளிக் கல்வி வரை இலவசமாக அனுபவிப்பதை குறிக்கிறது. இலவசச் சிகிச்சை என்பது இம்மாவட்டத்தின் கிராம மக்களின் சிகிச்சைத் தொகை நிதி மற்றும் சமூகரக் காப்புறுதியால் தீர்க்கப்படுவதை குறிக்கிறது. ஓய்வு பெற்ற முதியோரின் உதவித் தொகை என்பது கிராமப்புறப் பகுதிகள் அனைத்திலும் சமூகக் காப்புறுதி அமைப்புமுறை காணப்படுவதை குறிக்கிறது. தற்போது, வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் தொடக்கப் பள்ளியிலிருந்து மேனிலை பள்ளி வரையான இலவசக் கல்வியை wuqing மாவட்டம் மேற்கொண்டுள்ளது. திட்டப்படி, மூன்று ஆண்டுகளுக்குப் பின், இம்மாவட்டத்தின் அனைத்து மக்களும் இக்கொள்கையில் சேர்க்கப்படுவர்.


விவசாயிகளின் சிகிச்சையைப் பொறுத்துவரை, நன்மை தரும் கொள்கைகளை wuqing மாவட்டம் மேற்கொண்டு, அனைவருக்கும் நன்மையைக் கொண்டுவர முயற்சித்துள்ளது. இக்கொள்கை மேற்கொள்ளப்பட்ட பின், மருத்துவமனையில் மக்கள் பணம் திரும்பப் பெறும் விகிதம் பற்றி, இம்மாவட்டத்தின் பொறுப்பாளர் wangshupei செய்தியாளரிடம் எடுத்துக்கூறினார். அவர் கூறியதாவது:
தற்போது, மாவட்டம்-வட்டம்-கிராம நிலை மருத்துவமனைகளில் விவசாயிகள் பணம் திரும்ப்பப் பெறும் விகிதம் 75 விழுக்காடாகும். வட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் பணம் திரும்பப் பெறும் விகிதம் 50 விழுக்காடாகும். எனவே, நம் புதிய ஒத்துழைப்பு மருத்துவமுறைமையில் கிராமவாசிகள் ஆக்கப்பூர்வமாகக் சேர்ந்துள்ளனர். இவ்வாண்டு, இது 98 இவ்விழுக்காட்டை எட்டியுள்ளது என்றார் அவர்.
நகரம்-வட்டாரத்தின் வளர்ச்சியுடன், நகரத்துக்கு புறத்தேயுள்ள பல பின்தாங்கிய கிராமப்புறங்களுக்கும், புதிய வளர்ச்சியடைந்த நகரம்-வட்டாரத்துக்கும் இடையில் ஏற்றத் தாழ்வு தெளிவாக நிலவியுள்ளது. இதற்காக, 2003ம் ஆண்டின் துவக்கம் முதல், கிராம வீடுகளைச் சீரமைப்பது இடம் பெயர்ப்பது, சுற்றுச் சூழலை கட்டுப்படுத்துவது ஆகியவற்றையும் wuqing மாவட்டத்தின் அரசு மேற்கொண்டுள்ளது.


சுமார் 10 கிராமங்களின் விவசாயிகள் விசாலமான வீடுகளில் நுகர்ந்துள்ளனர். விவசாயிகளின் முந்தைய விளைநிலங்கள், வணிக முறையில் பயிரடப்பட்டுள்ளது. இதன் மூலம் நகரத்தின் வளர்ச்சிக்கு மேலதிக வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. இம்முன்னேற்றப் போக்கில், சில விவசாயிகளின் விளைநிலங்கள் இழக்கப்பட்டன. ஆனால், அவர்கள் கவலைப்படவில்லை. இது பற்றி Wuqing மாவட்டத்தின் dongpuwa குடியிருப்பு அலுவலகத்தின் துணை தலைவர் zhangkuiqing செய்தியாளரிடம் எடுத்துக்கூறினார். அவர் கூறியதாவது:


விளைநிலம் இழந்த விவசாயிகள், பன்முக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளனர். நமது தொழில் நிறுவனங்களில் வேலை செய்ய சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நகரம்-வட்டாரப் பணியாளரின் வரையறைப்படி முதிய பருவ கால காப்புறுதியில் சிலர் சேர்க்கப்படுகின்றனர். tianjin மாநகரத்தைச் சேர்ந்த, விளைநிலம் இழந்த விவசாயிகளின் முதிய பருவ கால காப்புறுதி விதியின்படி, அனைத்து முதியோர்களும் முதுமைக் கால காப்புறுதியில் சேர்க்கப்படுகின்றனர். தற்போது, நாம் இப்பணியை செய்கின்றோம். எனவே, முதுமைக் கால காப்புறுதி மற்றும் மருத்துவச் சிகிச்சைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில், கறவைமாடுகள் மற்றும் மாசுபாடற்ற காய்கள் பயிரிடும் தொழில் துறையை வளர்க்க விவசாயிகளை wuqing மாவட்ட அரசு தூண்டுகிறது. நகரத்தின் நுகர்வுச் சந்தையில் இத்தகைய தொழில் துறைகள் நேரடியாக நுழைந்துள்ளன. இதன் மூலம், விவசாயிகள் குறுகிய காலத்தில் பயனடைய முடிகிறது. தவிரவும், அடிப்படை வசதிக் கட்டுமானத்தில், கிராமப்புறத்தின் மின்சாரம், நெடுஞ்சாலை போன்ற வசதிகளை wuqing மாவட்டம் பெரிதும் கட்டியமைத்து வருகிறது.


திட்டப்படி, 2010ம் ஆண்டுக்குள், குடி நீர் பாதுகாப்பு, வாழ்க்கை எரியாற்றல், குப்பைகளை கையாள்வது ஆகியவற்றை இம்மாவட்டத்தின் 741 நிர்வாக கிராமங்கள் நனவாக்க வேண்டும். அப்போதுதான், சுற்றுச் சூழல், அடிப்படை வசதிகள் ஆகியவைற்றில் wuqing மாவட்டத்தின் கிராமப்புறங்கள் புதிய முன்னேற்றமடையும். விவசாயிகளின் வாழ்க்கைத் தரமும் பெரிதும் உயர்த்தப்படும்.