• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-24 11:16:16    
உருவாகும் புதுமுயற்சிகள்

cri

இருபத்தியோராம் நூற்றாண்டு கணினிமயமான காலம் என்றால் மிகையாகாது. மனிதர்களால் செய்யப்பட்ட பல வேலைகள் விரைவாகவும், துல்லியமாகவும் கணினியால் செய்யப்படுகிறன. பல அரசு நிறுவனங்கள் கணினிமயப்படுத்தப் பட்டு்விட்டன. சிலவற்றில் படிப்படியாக புகுத்தப்பட்டு வருகிறது. ஆவணங்களில் பாதுகாக்கப்பட்டவை எல்லாம் இன்று கணினியில் பதிவுசெய்யப்பட்டு தேவைப்படும் போது பயன்படுத்தப்பட்டு வருகிறன. கணினியின் வன்பொருட்கள் நாளும் புத்தாக்கங்களோடு புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மிக முக்கியமானது நினைவக ஊடகங்கள். அதாவது நாம் பதிவு செய்கின்ற பதிவுகளை எல்லாம் பதித்து சேமித்து வைத்திருக்கும் ஊடகங்கள். இந்த நினைவகம் கணினியின் சிபியு எனப்படுகின்ற நடுவண் முறைவழியாக்க தொகுதியில் காணப்படுகிறது.
இதுவரை நினைவகங்களில் சேமிக்கின்ற ஊடகங்களாக காந்த மற்றும் ஒளி ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவைகளுக்கு பதிலாக புரத ஊடக பயன்பாடு மிக முக்கிய அதிக பங்காற்ற முடியும் என்று அண்மைய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஐப்பானினுள்ள ஒசாகா பல்கலைக்கழகத்தின் Tetsuro Majima என்ற ஆய்வாளர் கணினியின் தரவுகளை சேமிக்க புரத ஊடகங்கள் பயன்படுத்தப்படலாம் என்பதை சோதனைகள் மூலம் காட்டியுள்ளார். அவ்வாறு புரத ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டால் தற்போது பயன்பாட்டிலுள்ள காந்த மற்றும் ஒளி ஊடகங்களின் திறன்களை மிஞ்சியதாக இருக்கும் என்றும், வியாபார நோக்கிலான புரத ஊடக பயன்பாடு ஐந்தாண்டுகளுக்குள் தயாராகிவிடும் என்றும் Majima தெரிவித்துள்ளார்.
புரத அடிப்படையிலான நினைவக சாதனம் காந்த ஊடகங்களால் பாதிப்படைவதில்லை. சிறப்பு வகை புரத அணுவை கண்ணாடி துண்டு மேல் தடவி தரவுகளை சேமிக்கும் அணுகுமுறையை ஆய்வாளர்கள் எண்பித்துள்ளனர். ஒளி மற்றும் வேதியல் பொருட்களை கலந்து பயன்படுத்தி அதிலிருந்து தரவுகளை எடுத்து பயன்படுத்துகின்ற மற்றும் அவைகளை நீக்கி விடுக்கின்ற கணினி முறைமைகளை நிரூபித்துள்ளனர்.
புரத ஊடகங்களை ஒரு நிமிடத்தில் பொருத்திவிடலாம் என்றும், தரமான கணினியின் இணையான வேகத்தில் தரவுகளை எடுத்து பயன்படுத்தலாம் என்றும். நீண்டகால சேமிப்பை உத்தரவாதம் செய்யவேண்டுமானால் 4 திகிரி செல்சியஸ் அதாவது 40 திகிரி பாரன்கீட்டில் வைக்க வேண்டும் என்று Majima தெரிவித்துள்ளார். அவருடைய ஆய்வு முடிவுகள் அமெரிக்க வேதியல் அமைப்பின் அறிவியல் இதழான Lanmuir ரின் புதிய பதிப்பில் வெளிவந்துள்ளன.
Majima வும் அவருடன் ஆய்வு நடத்தியவர்களும் இந்த புரத ஊடகம் உடல் உணர்கருவிகள் மற்றும் தானாக இயங்கும் மருத்துவ ஆய்வுகளிலும் பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர். தற்போதைய பயன்பாடுகளை விட முன்னேறிய திறன்களுடனும், எளிதானதாகவும் இருந்தால், புரத ஊடக முறை கணினி பயன்பாட்டில் அதிககாலம் தொடர வாய்ப்பு உள்ளது.