• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-24 09:20:28    
மரத்தான் ஓட்டப்போட்டி

cri
2008ம் ஆண்டு சியோல் சர்வதேச மரத்தான் ஓட்டப்போட்டி 16ம் நாள் தென் கொரியாவின் தலைநகரான சியோலில் நடைபெற்றது. சீன வீராங்கனை Zhang Shujing மகளிர் பிரிவின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
சீன வீராங்கனை Zhang Shujing 2 மணி நேரம் 26 நிமிடங்கள் 11 வினாடிகள் என்ற காதனையுடன், இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளார். சியோ சர்வதேச மரத்தான் ஓட்டப்போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் 3வது முறையாக பெற்றுள்ளார்.

சீன வீராங்கனை Wang Xueqin இப்போட்டியின் இரண்டாவது இடம் பெற்றுள்ளார்.
2008ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்து பூப்பந்து போட்டி 16ம் நாள் முடிவடைந்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவில், சீன வீரர் Lin Dan, 2-0 என்ற வெற்றிக் கணக்கில் மலேசிய வீரர் Lee Chong Weiஐ தோற்கடித்து, இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில், சீன வீராங்கனை Xie Xingfang 2-0 என்ற வெற்றிக் கணக்கில் அணித் தோழி Zhang Ningஐ தோற்கடித்து, இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார்.
தவிர, சீன He Hanbin, Yu Yang இணையும், Yang Wei, Zhang Jiewen இணையும் கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவின் சாம்பியன் பட்டங்களை முறையே பெற்றுள்ளனர்.

உலக மகளிர் தொழில் முறை டென்னிஸ் சம்மேளனத்தின் உயர் நிலை போட்டியான பசிபிக் வாழ்க்கை வெளிப்படை என்னும் டென்னிஸ் போட்டி, 18ம் நாள் காலை தொடங்கி அமெரிக்காவின் இந்தியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. சீன இணை zheng jie/yan zi, மகளிர் இரட்டையர் போட்டியின் 2வது சுற்று போட்டியில், 2-1 என்ற ஆட்ட கணக்கில் இத்தாலி இணையை தோற்கடித்து, அடுத்த சுற்றில் நுழைந்துள்ளனர்.
2007-2008 ஆண்டுக்கான இத்தாலி கால்பந்து மன்றங்களுக்கிடை முதல் தர போட்டியின் 28வது சுற்று ஆட்டங்கள் 17ம் நாள் முடிவடைந்தன. மன்றங்களு்ககிடை போட்டியில் முதலாவது தரவரிசை Inter Milan அணி, அதன் வீரர்களான, Vieira, Jimenez ஆகியோர் அடித்த 2 கோல்களால், Palermo அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

தற்போது, 67 புள்ளிகளைப் பெற்ற நிலைமையில், Inter Milan அணி மன்றங்களுங்கிடை போட்டியில் முதலிடம் வகிக்கின்றது.
அமெரிக்கத் தொழில் முறை கூடைப்பந்து மன்றங்களுக்கிடை போட்டி 17ம் நாள் தொடர்ந்து நடைபெற்றது. புகழ் பெற்ற சீன வீரர் யோ மீன்னை கொண்ட Houston Rockets அணி 104-92 என்ற புள்ளிக்கணக்கில் Los Angeles Lakers அணியைத் தோற்கடித்து, மேற்கு பகுதி மன்றங்களுக்கிடையே முதலாவது இடம் பெற்றுள்ளது.
இப்போட்டியின் வெற்றி மூலம், Houston Rockets அணி தொடர்ந்து 22வது முறையாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.