சீனாவின் திபெதில் நிகழ்ந்த வன்முறை நிகழ்ச்சி பற்றி உண்மையற்ற செய்தி வெளியிட்டதை ஜெர்மன் RTL தொலைக்காட்சி நிலையத்தின் இணைய தளம் 23ம் நாள், தன் இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் ஏற்றுகொண்டது.
தடிகளை கொண்டு நான்கு காவல்துறையினர் பேரணி நடத்தியவர்களைத் விரட்டியடிப்பதென்ற நிலையை வெளிப்படுத்தும் நிழற்படத்தை RTL தொலைக்காட்சி நிலைய இணைய தளத்தின் செய்தி பகுதி அண்மையில் வெளியிட்டது. சீன காவல்துறையினர் திபெதில் எதிர்ப்பாளரை அடக்கினர் என்று அப்புகைப்பட்டத்தில் தவறான விளக்கம் கொடுத்தது. மார்ச் 3ம் நாள் நேபாள தலைநகரான காட்மாண்டில் காவல்துறையினர் பேரணி நடத்தியவர்களைக் கலைத்ததை அப்புகைபடம் உண்மையாக வெளிப்படுத்த வேண்டும் என்று இவ்விணையதளம் 23ம் நாள் ஏற்றுகொண்டது. RTL தொலைக்காட்சி நிலையத்தின் இணையதளம் தன் அறிக்கையில் இத்தவறை ஏற்றுகொண்டதோடு, அதை ஒட்டி வருத்தம் தெரிவித்தது.
|