தலாய் லாமா குழுவின் போலித் தன்மை
cri
நாட்டைப் பிளவுப்படுத்தி, தேசிய இனத்தைச் சீர்குலைக்கும் தலாய் லாமா குழுவின் தன்மையையும், அது வக்காலத்து வாங்கும் அகிம்சைக் கூற்றும் கொடிதானதாகவும் போலித்தனமாகவும் உள்ளது என்பதையும் அண்மையில் லாசா மற்றும் இதர பிரதேசங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன. சீனத் திபெத்தியல் ஆய்வு மையத்தின் வரலாற்று ஆய்வகத்தின் ஆய்வாளர் chen qing ying இதை சுட்டிக்காட்டினார். 1959ம் ஆண்டு, திபெத்தின் சுதந்திரத்தை நனவாக்க தலாய் லாமா குழு இராணுவ கிளர்ச்சியை ஏற்பாடு செய்தது. இது தோல்வியுற்ற பின், அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றார். ஆனால், வன்முறை செயல் மூலம், எல்லை பிரதேசத்தின் சமூக ஒழுங்கைச் சீர்குலைக்கும் முயற்சியை தலாய் லாமா குழு ஒருபோதும் நிறுத்தவில்லை என்று chen qing ying கூறினார்.
|
|