மார்ச் திங்கள் முதல், லாசா நகரிலுள்ள போதலா மாளிகை, லோபுலின்கா கோயில் ஆகியவற்றுக்கான செப்பனிடும் பணி, படிப்படியாக மீட்கப்பட்டு வருகிறது என்று தெரிய வருகின்றது.
போதலா மாளிகை, லோபுலின்கா கோயில், சாஜா கோயில் ஆகிய முக்கிய தொல் கட்டடங்களைச் செப்பனிடும் பணியின் பொறுப்பாளர் நிமா செரங், மார்ச் 14ம் நாள் லாசா நகரில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்கு முன், செப்பனிடும் பணி மீட்கப்பட்டது. வன்முறை நடவடிக்கை நிகழ்ந்த போதும், செப்பனிடும் பணி தொடர்ந்தது என்று அவர் தெரிவித்தார். அரிய பண்டைய கட்டடங்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதற்காக, போதலா மாளிகை, லோபுலின்கா கோயில் ஆகியவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டன என்றும் நிமா செரங் கூறினார்.
|