இன்று, 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புனித்த தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இது, தீபத்தொடரோட்ட நடவடிக்கையின் துவக்கமாகும்.
கிரேக்க உள்ளூர் நேரப்படி, இன்று காலை 11மணிக்கு, தீபம் ஏற்றும் விழா, ஒலிம்பியா நகரிலுள்ள hera கோயிலின் சிதிலத்தில் நடைபெற்றது. பாரம்பரிய முறையின் படி, பண்டைக்கால கிரேக்கத்தின் தலைமை பெண் குரு, சூரிய ஆற்றலை பயன்படுத்தி, ஒலிம்பிக் புனித்த தீயை மூட்டினார். அடுத்து, கிரேக்கத்தின் புகழ் பெற்ற வீரரான Alexandros Nikolaidis, தீபக்கோலில், தலைமை பெண் குருவிடமிருந்து புனிதத் தீயை பெற்றார். தீபத்தோடரோட்ட நடவடிக்கை, ஆக்கப்பூர்வமாக துவங்கியதை இது குறிக்கிறது. கிரேக்க அரசுத் தலைவர் Karolos, சர்வேதச ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவர் ஜேக்குவிங் ரோக், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவர் Liu Qi, ஒலிம்பியா நகராட்சித் தலைவர் Join Antonis ஆகியோர், இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
|