2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபம், இன்று கிரேக்கத்தின் ஒலிம்பியான நகரில் ,ஏற்றப்பட்டது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்கம், இதன் மூலம் நனவாக்கப்பட்டது.

கிரேக்கத்திலான இத்தீபத் தொடரோட்டத்தின் நீளம் 1528கிலோமீட்டராகும். இதில் 16பிரதேசங்களும் 43நகரங்களும் இடம்பெறுகின்றன. அவற்றில் 29 நகரங்கள் ஒலிம்பிக் தீபத்தின் ஒப்படைப்பு விழாவை நடத்தும். தீபத் தொடரோட்ட நடவடிக்கைகள் முழுவதிலும் 605 தீபமேந்து நபர்கள் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
|