பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, உகல வெளிநாடுகளுக்கு திறக்கப்பட்ட சீனாவைச் செவ்வனே அறியச் செய்து, சீனா கொண்டுவரும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை அதற்கு வழங்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Rogge நேற்று கிரேக்கத்தில் ஒலிம்பியா நகரில் தெரிவித்தார்.
இன்று ஒலிம்பியாவில் நடைபெறும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதமான தீப்பிழம்பை பெறுவதன் விழாவில் Rogge கலந்துகொள்வார். சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் உலகளவில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் பங்குகொள்வார்கள். ஒலிம்பிக் எழுச்சி விரிவான முறையில் பரவலாம் என்று அவர் கூறினார்.
அத்துடன், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறும் வகையில், சர்வதேச ஒலிம்பிக் குழுவும் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக்குழுவும் நெருங்கிய ஒத்துழைப்பை தொடர்ந்து நிலைநிறுத்தும் என்றும் Rogge தெரிவித்தார்.
|