கடந்த ஆண்டு, முதல் திபெத் இன மொழியியலில் முனைவர் பட்டத்தை வடமேற்கு சீனாவிலுள்ள க்கான் சூ மாநிலத்தின் வடமேற்குத் தேசிய இனப் பல்கலைக்கழகம் முதன்முறையாக வழங்கிய பின், இவ்வாண்டு 2வது முறை முனைவர், பட்டம் வழங்கப்பட உள்ளது.
இப்பல்கலைக்கழகம், நவ சீனவின் முதலாவது சிறுப்பான்மைத் தேசிய இன பல்கலைக்கழகமாகும். இது வரை, அதிலுள்ள திபெத் இன மொழி பற்றிய பண்பாட்டுக் கல்லூரியில், சுமார் 4 ஆயிரம் இளங்கலை பட்டதாரிகளும், 160க்கு மேற்பட்ட முதுகலை பட்டதாரிகளும் பயின்றுள்ளனர். 2004ம் ஆண்டு, அதில், பழங்கால திபெத் இன மொழி ஏடு மற்றும் இலக்கிய ஆய்வு என்ற சிறப்புத்துறையில் முனைவர் பட்டம் பயிற்றுவிக்கப்பட துவங்கியது அவர்கள், தமது தேசிய இன மற்றும் ஹான் மொழியில் தேர்ச்சி பெறுவது மட்டுமல்ல, ஆங்கில மற்றும் சமஸ்கிருத்தைக் கற்றுத்தேற வேண்டும். அத்தோடு ஆய்வுக் கண்ணோட்டத்தில், திபெத் இனப் பண்பாட்டை கற்பதோடு, அதனை பாதுகாத்து, தொகுத்து, வெளிக்கொணர்வர்.
|