• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-25 14:49:53    
ச்சோ க்கோ தியன் சிதில அருங்காட்சியகம்

cri

ச்சோ க்கோ தியன் சிதில அருங்காட்சியகம், பெய்சிங் மாநகரின் தென்மேற்கு பகுதியிலுள்ள Fang Shan பிரதேசத்தின் Zhou kou dian Long Gu மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பழங்குடி மக்கள் சிதில அருங்காட்சியகமான அது, 1953ம் ஆண்டு, கட்டியமைக்கப்பட்டது.

சீன அரசவையால், நாட்டின் முக்கிய தொல்பொருட்கள் பாதுகாப்பு பிரிவாகவும், யூனேஸ் கோவால் உலகப் பண்பாட்டு மரபு செல்வமாகவும் இது நிர்ணயிக்கப்படுகிறது.

இச்சிதில அருங்காட்சியகத்தில், 6 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெய்ஜிங்கினரும், 1 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய குகையினரும், 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மலையின் உச்சியிலுள்ள குகையினரும் மக்களும், முறைமையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். முன் மண்டபத்தின் நடுவில், Long Gu மலையின் மாதிரி இருக்கிறது. அலுமாரிகளில், ச்சோ க்கோ தியன் பிரதேசத்தில், 40 கோடி ஆண்டுகளுக்கு முந்திய பல்வேறு வகை கற்பாறைகளிலான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

முதல் காட்சி மண்டலத்தில், பழங்குடி பெய்ஜிங்கினரின் மண்டை ஓடுகள் புதைபடிவ பொருட்கள், தீ பயன்படுத்தப்பட்ட சிதிலம், கற்களால் தயாரிக்கப்பட்ட கருவிகளும், கரடுமுரடான, சாதாரணமான செதுக்கு கருவிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் காட்சி மண்டலத்தில், மாதிரி உருவங்கள் மூலம், பழங்குடி பெய்ஜிங்கினர் தங்கி இருந்த குகைகள் மற்றும் பிற இடங்கள் காட்சியளிக்கின்றன.

மூன்றாம் காட்சி மண்டலத்தில், Long Gu மலையில் கண்டறியப்பட்ட 20க்கு மேற்பட்ட முதுகெலும்பு கொண்ட விலங்குகளின் புதைபடிவச் சிதிலங்கள், பழங்குடி மக்கள் தங்கி இருந்த சிதிலங்கள், சில கற்களால் தயாரிக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள் முதலியவை, முக்கியமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.

நான்காம் காட்சி மண்டலத்தில், சீனா உள்ளிட்ட உலகிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் கண்டறியப்பட்ட பல்வேறு காலங்களில் வாழ்ந்த பழங்குடி மக்களின் புதைபடிவங்கள், கற் கருவிகள், சில ஓவியக்கலை மற்றும் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.