ஜெர்மன் RTL தொலைக்காட்சி நிலையத்தின் உண்மையில்லாத செய்திகள்
cri
அண்மையில், ஜெர்மன் RTL தொலைக்காட்சி நிலையத்தின் இணைய தளம், சீனத் திபெத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் பற்றி உண்மையில்லாத செய்திகளை வெளியிட்டதற்கு அவ்விணையத்தைப் பயன்படுத்துவோர் பலர், பேராத்திரம் தெரிவித்தனர். RTL தொலைக்காட்சி நிலையத்தின் இணைய தளம் முதலிய ஜெர்மன் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட உண்மையில்லாத செய்திகள், ஜெர்மன் செய்தி ஊடகங்களை இகழ்ச்சிக்கு உட்படுத்தியுள்ளன. அவை சீனா மேல் தப்பு எண்ணங்களைக் கொண்டுள்ளன. தமது பிரச்சாரங்களின் மூலம், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் புறக்கணித்து, திபெத்தைச் சீனாவிலிருந்து பிளவுப்படுத்த ஜெர்மன் செய்தி ஊடகங்கள் முயன்றுள்ளன என்று இணையத்தைப் பயன்படுத்துவோரில் ஒருவரான Franz என்பவர் கூறினார். பல ஜெர்மனியருக்குச் சீனாவைத் தெரியாது என்று இணையத்தைப் பயன்படுத்துவோரில் வேறு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக, ஜெர்மன் செய்தி ஊடகங்கள், சீனாவைக் குற்றஞ்சாட்டியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, மேலை நாடுகள் தொடர்ந்து வளராத நிலையில் சீனா தொடர்ந்து வளர்ந்து வருவதே அதற்குக் காரணமாகும் என்றும் அவர் கூறினார்.
|
|