• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-25 13:06:25    
சீனப் பெயர்கள் (அ)

cri

பெயரில் என்ன இருக்கிறது. வேறு பேர் சொல்லி அழைத்தாலும் ரோஜாவின் வாசம் மாறாது என்பதாக காதலன் ரோமியோவிடம் காதலி ஜூலியட் சொல்வதாக ஷேக்ஸ்பியர் எழுதியிருப்பார். ஆனால் பெயரில் என்ன இருக்கிறது என்பதை அவ்வளவு எளிதாக யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. விளம்பரத்துறையினருக்கு நன்றாகத் தெரியும் பெயரில் நிச்சயம் முக்கியத்துவம் இருக்கிறது என்பது.


எடுத்துக்காட்டாக நாம் பயன்படுத்தும் பொருட்களின் பெயர்களை பாருங்கள். அழகான, எளிமையான, சுருக்கமான பெயர்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கும். இத்தகைய பெயர்கள் எப்போதும் நமது நினைவில் தங்குவதுண்டு. பொருட்களை விடுவோம். நமது பெயர்களையே எடுத்துக்கொள்வோம். நமக்கு நமது பெற்றோர் இட்ட பெயர் ஒன்றாக இருப்பினும், பள்ளியில், கல்லூரியில் ஒரு சுட்டு பெயர் அல்லது பட்டப்பெயர் கிடைக்கும். நாமே நமக்கு ஒரு புணைப்பெயரை சூட்டிக்கொள்வதுமுண்டு. எல்லாமே அவரவர் பார்வையில் அழகானவை, பொருத்தமானவை. இதில் பட்டப்பெயர்கள் அழகானவை, பொருத்தமானவை என்று சூட்டப்பட்டவர் கூறமாட்டார். பட்டப்பெயர் சூட்டிய புண்ணியவான்கள் புன்னகையோடு "உனக்கு பொருத்தமாத்தான் மாப்ளே வச்சோம்" என்பர். தமிழகத்தில் பொதுவாக நாம் குடும்பப்பெயர் என்று எதையும் பயன்படுத்துவதில்லை. சாதிப்பெயரை தம் பெயரோடு இணைத்து பயன்படுத்தும் வழமையும் இப்போது அவ்வளவு பெரிதாக காணமுடிவதில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்துவதைப் போன்றே சீனாவிலும் குடும்பப்ப பெயரை மக்கள் தங்கள் பெயரோடு இணைத்தே பயன்படுத்துகின்றனர். 

முன்பின் அறிமுகமில்லாத இரண்டு சீனர்கள் சந்திக்கும்போது முதலில் கேட்கப்படும் கேள்வி "உங்கள் பெயரை தெரிந்துகொள்ளலாமா?" என்பதே. பெயரைச் சொல்லும்போது தங்களுடைய குடும்பப்பெயரையும் இணைத்து முழுப்பெயரையும் சொல்வதே சீனர்களின் வழமை. மேற்கத்திய நாடுகளில் பொதுவாக குடும்பப்பெயரை தங்களது பெயரின் இறுதியில் பயன்படுத்தும் வழமை உள்ளது. ஆனால் சீனாவில், தங்கள் குடும்பப்பெயரை முதலில் வைத்து தங்கள் முழுப்பெயரை சொல்வது வழமை. 


தமிழ்ப்பிரிவின் தலைவர் தி. கலையரசி அவர்களுடைய சீனப் பெயர் ஷு ஜுவன் ஹுவா. அவரது குடும்பப் பெயர் ஷு, சூட்டப்பட்ட பெயர் ஜுவன் ஹுவா. புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய புதிய பணியாளர் திலகவதியின் முழுப்பெயர் ஹான்ச்சுங். ச்சுங் அவரது சூட்டப்பட்ட பெயர், ஹான் அவரது குடும்பப் பெயர். சீனாவில் மேலும் சிறப்பான ஒரு அம்சம், திருமணமானாலும் பெண்கள் தங்கள் குடும்பப்பெயரை மாற்றுவதில்லை. கணவனின் குடும்பப்பெயரை தம் பெயரோடு பெண்கள் பயன்படுத்துவதில்லை, அவர்களது குடும்பப்பெயரே அவர்களுக்கு இறுதிவரை. 
சீனாவில் 8 ஆயிரத்துக்கும் மேலான குடும்பப் பெயர்கள் உள்ளனவாம். சீனாவின் பெரும்பாண்மை இனமான ஹான் இனத்தோரிடையே உள்ள குடும்பப்பெயர்கள் மட்டுமே 3 ஆயிரமாகும். அவற்றில் லி, வாங், ஷாங் ஆகியவை பரவலாக பயன்படுத்தப்படுபவை. இந்த பெயர்கள் கொண்ட சீனர்களின் எண்ணிக்கை மட்டுமே 25 கோடி. பொதுவாக இக்குடும்பப்பெயர்கள் ஒற்றை எழுத்தை அல்லது அசையை கொண்டவை. வாங், ஷாங், வாங், ஷாவ் ஆகியவை தமிழில் எழுதினால்தான் இரண்டு எழுத்து, சீன மொழியில் இவற்றை எழுத ஒரே எழுத்து போதும். பார்க்க ஏதோ படம் வரைந்தது போல இருந்தாலும் அவை எழுத்துக்களே. இரட்டை அசை பெயர்களும் உள்ளன. உதாரணமாக ஓவ்யாங், ஷுகெ, சுமா, குங்சுன். சூட்டப்படும் பெயர்கள் பொதுவாக இரண்டு எழுத்துக்களை அல்லது அசைகளை கொண்டுள்ளன. ஆனால் ஒற்றை அசையை பயன்படுத்துவோரும் உண்டு. இதற்கு கலையரசியின் சூட்டப்பட்ட பெயரான ஜுவன் ஹுவா, திலகவதியின் சூட்டப்பட்ட பெயரான ச்சுங் ஆகியவற்றை எடுத்துக்காட்டாக கூறலாம். கலையரசிக்கு இரட்டை அசை பெயர், திலகவதிக்கு ஒற்றை அசை பெயர். சீனாவில் மூன்றெழுத்து அல்லது மூன்று அசைகொண்ட பெயர்கள் பொதுவாக முழுப்பெயராக காணப்படுகின்றன. சிலருக்கு நான்கு அசை கொண்ட முழுப்பெயர்கள் உண்டு. அதாவது குடும்பப்பெயரும் இரண்டு எழுத்து, சூட்டப்பட்ட பெயரும் இரண்டு எழுத்து. ஆனால், மிகப்பரவலாக காணப்படுவது,ஒற்றை எழுத்து குடும்பப் பெயர், இரண்டு எழுத்து சூட்டப்பட்ட பெயர்களே. வழிவழியாக தந்தையிடமிருந்து பிள்ளைகளுக்கு என்பதாக குடும்பப்பெயர் தொடர்ந்துகொண்டிருக்கிறது. முன்னர் குறிப்பிட்டது போல, பெண்கள் திருமணத்துக்கு பின்னும், தங்கள் தந்தை வழி குடும்பப்பெயரையே பயன்படுத்துகின்றனர்.