• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-25 09:12:40    
நிகழ்ச்சிகளை கேட்டு சுறுசுறுப்பாக தெரிவித்த கருத்துக்கள்

cri

கிளீட்டஸ் மணக்கால் இரா.அன்பழகன் அறிவியல் கல்வி நலவாழ்வு பற்றி அனுப்பிய கடிதம். கால்நடை மருத்துவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். காய்கறி விவசாயத்திற்கு மருத்துவர் பற்றிய தகவல் கேட்டு ஆச்சரியமடைந்தோம். காய்கறிகளுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள அளவிலான வேதியல் உரங்களை சேர்க்க உதவும் அவர்களின் பணி ஆக்கப்பூர்வமானது. இந்த முறை பிற நாடுகளில் பின்பற்றப்பட்டால் மக்களின் உடல் நலனில் அக்கறை கொள்ளும் சிறந்த செயல்பாடாக இருக்கும்.


கலை அடுத்து கோவை சரவணமுத்து அனுப்பிய கடிதம். இந்திய தலைமையமைச்சர் மன்மோகன்சிங்கின் சீனப்பயணம், ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் மற்றும் இதர தகவல்களை அறிந்து மகிழ்ந்தேன். சீன இந்திய நட்புறவு தொடந்து வளர வேண்டும். அதற்கு எல்லை சிக்கல்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவிட்டு, ஒன்று மற்றதன் நலன்களை நிவர்த்தி செய்யும் ஒத்துழைப்புகள் வளர்க்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். அனைத்து நிகழ்ச்சிகளும் தரமாக வழங்கப்படுகின்றன. வாழ்த்துக்கள்.
கிளீட்டஸ் அடுத்தாக குருவம்பட்டி டி. குமார் உங்கள் குரல் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். உலகில் பரந்துபட்டு வாழும் தமிழர்கள் அனைவரும் முனைந்து கேட்கும் சீன வானொலியே உன் பணி சிறக்க வாழ்த்துக்கள். நேயர்மன்ற ஆண்டுவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒலிபரப்பி, எங்கள் குரலை உங்கள் குரலாக வலம்வர செய்வதற்கு பாராட்டுக்கள். சீன மற்றும் உலக நாடுகளின் நிகழ்ச்சிகளை தெளிவாகவும், அருமையாகவும் வழங்கும் சீன வானொலியின் செய்திகள் அமுதமே.


கலை தொடர்வது கதிர்நாயக்கன்பட்டி எஸ். பாரதி அனுப்பிய கடிதம். செய்தி தொகுப்பில் சீனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிக்கேட்டேன். நாட்டின் வளர்ச்சி என்பது தொழில் துறையின் முன்னேற்றத்தில் மட்டுமல்ல. தொழிற்சாலைகள் வெளியேற்றும் மாசுபாடுகளை தடைசெய்வதோடு, எதிர்கால தலைமுறைகளுக்கு பாதுகாப்பைபும், சுகாதாரத்தையும், உயிரின சுற்றுச்சூழலையும் பேணிகாப்பதிலும் வளர்ச்சி அடங்கியுள்ளது என்பதை அறிய முடிந்தது.
கீளீட்டஸ் அடுத்து ஆரணி பொன். தங்கவேலன் நேருக்குநேர் நிகழ்ச்சி குறித்து அனுப்பிய கடிதம். எஸ். எம். இரவிசந்திரன் அவர்களின் விளக்கம் மூலம் திருமதி வாணி, திருமதி விஜயலட்சுமி ஆகியோரின் தமிழக வருகை குறித்து அறிந்தோம். திருமதி வாணி ஜெயங்கொண்டத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். கருத்தரங்கு தொடங்குவதற்கு முன் ரதத்தில் அவர்கள் அழைத்து வரப்பட்டனர். ரதத்தில் அமர்ந்தவுடன் அவர்களுக்கு பட்டுமாலை அணிவித்து மகிழ்ந்தது எனது நீங்காத நினைவாக இருக்கின்றது.


கலை தெடர்வது கிணிகதேனை வி. துரை ராஜா, கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். எய்டஸ், மலேரியா மற்றும் காச நோய்களை ஒழிக்க உலக நிதியத்திற்கு சீனா நிதியுதவி வழங்கியமை அறிந்து பெருமைப்பட்டேன். உலக அளவில் பொறுப்புகள் எடுத்து சேவை மனப்பான்மையோடு உதவி வழங்குகின்ற சீனாவின் முயற்சிகள் வெற்றிபெற வேண்டும். உலக எயிட்ஸ் நாளை முன்னிட்டு சீனப் பெருஞ்சுவரில் பிரமாண்டமான எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பற்றி தெரிந்து கொண்டேன். அதன் புகைப்படங்களை இலங்கை தமிழ் பத்திரிகையென்றில் கண்டு வியப்படைந்தேன்.


கிளீட்டஸ் அடுத்து இராசிபுரம் எம். குருசாமி அனுப்பிய கடிதம். சீன தேசிய இன குடும்பம் நிகழ்ச்சியில் சிறுபான்மை தேசிய இன மக்களின் மொழிகள் மற்றும் எழுத்துகள் அரசால் போற்றி பாதுகாக்கப்படுவதை அறிந்தேன். மேலும் ஒலிம்பிக் போட்டிக்கான தன்னார்வ தொண்டர்கள் பதிவு மிக அதிகமாக இருப்பது பெய்சிங் ஒலிம்பிக் போட்டிக்கு சீனா கொடுக்கும் மேலான முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகிறது.
கலை அடுத்ததாக பாலக்காடு டி. வி. இராமசாமி எழுதிய கடிதம். எனக்கு சீன மொழி தொரியாவிட்டாலும் தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியை கேட்டு வருகிறேன். சீன உரையாடல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. மொழி பரவல் பணியில் சீன வானொலியின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பில் கன்புசியஸ் கழகத்தின் வெளிநாடுகளிலான பண்பாட்டு பணிகளையும் அறிந்தேன். மகிழ்தேன்.


மின்னஞ்சல் பகுதி
திருநெல்வேலி, திருமதி கனிஷ்கா
மார்ச் திங்கள் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் நாளாகும். கனிஷ்கா அனுப்பிய தாலாட்டு பாடல் ஒன்றில் பெண்குழந்தை நல்லொழுக்கங்கள் பெற்று வாழ வாழ்த்தும் தாலாட்டு வரிகளை நேயர்களுக்காக வழங்குகின்றோம்.
பெரியோரை மதித்திடணும்! பேருபல பெற்றிடணும்!
சான்றோரை துதித்திடணும்! சாதனைகள் புரிந்திடணும்!
தமிழ்ப் பண்பாடு காத்து நீயும் பார்போற்ற வாழ்ந்திடனும்!

செந்தமிழ்ப் பெண்ணே! என் சிங்காரக் கண்ணே!
பெண்மைக்கொரு இழிவு வந்தால் பொன்னே நீ கேட்டிடணும்!
பெண்ணுரிமை காத்து தமிழ்ப் பெண்ணாக வாழ்ந்திடனும்! அந்தப் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் நீ
வாழ்வாங்கு வாழ்ந்திடனும்!
ஆராரோ! ஆரிரரோ! என் வீர மகளே நீ உறங்கு!
மதுரை என். ராமசாமி
சீனாவில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் தற்போதைய அரசுத்தலைவரான ஹீசிந்தாவ் 2வது முறையாக அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மகிழ்ந்தோம். அவரது பதவி காலத்தில் சீனா பொருளாதர வளர்ச்சி மற்றும் கட்டுகோப்பை அடைந்து உள்ளது. அவராது வெற்றிக்கு உளங்கனிந்த நல்வாழ்த்துகள்.


காங்கேயம் P.நந்தகுமார்……
செய்தி தொகுப்பில் புதிய சட்ட திருத்த்த்தின் படி ஊனமுற்றோரின் நடவடிக்கைகளுக்கு ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்பு, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கும், சேவைகளுக்கும் அரசு கொள்முதலில் முக்கியத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகபாதுகாப்பு என ஊனமுற்றோர் நலனுக்கான திட்டம் பற்றி அறிந்தேன். ஊனமுற்றோர் வாழ்க்கை தரத்தையும் நலனையும் உயர்த்தி நாட்டின் நிர்வாகத்தில் பங்கெடுக்க செய்யும் இச்சட்டத்திருத்தம் மனித நேய அடிப்படையை முன்னேற்றும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை..


......ஊட்டி எஸ்.நித்தியா.......
சிறப்பு நிகழ்ச்சியில் சீனாவின் மத துறையின் அமைதிக் குழு என்ற நிகழ்ச்சியை கேட்டேன். 1994 ஆம் ஆண்டு சீன புத்த மதத்தின் தலைவர் ஜாவ் பிச்சு வின் முயற்சியால் சீன மதத்துறையின் அமைதிக் குழு நிறுவப்பட்டதை அறிந்தேன். சீனாவின் பல்வேறு மதப் பிரிவுகள் மற்றும் அவை சார்ந்த மத நம்பிக்கையாளர்களுக்கு இடையில் உலக அமைதி மற்றும் பாதுகாப்பு இலட்சியத்தை வலுப்படுத்தி பரிமாற்றங்களை வளர்ப்பது போன்ற முயற்சிகளை போற்றப்பட வேண்டும்.


……வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்……
செய்தித் தொகுப்பில் 2007 ஆம் ஆண்டு அமெரிக்க மனித உரிமை பற்றிய பதிவேடு என்ற கட்டுரையைக் கேட்டேன். ஆண்டுதோறும், மனித உரிமை அறிக்கை என்ற பெயரில் பல நாடுகளை குறை கூறுகின்ற அமெரிக்காவுக்கு தக்க பதிலடி வழங்கிய சீனாவிற்கு என் பாராட்டுக்கள் ஈராக் போர் பெரிய மனித உரிமை மீறலாகும். இன்னொரு நாட்டில் போர் நடத்தி, அந்நாட்டு மக்களை கொன்று குவித்த அமெரிக்காவிற்கு பிற நாடுகளின் மனித உரிமை பற்றி பேச எள்ளளவும் அருகதையில்லை.


செல்லூர். நா. சீனிவாசன்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் சீன மாணவர்களின் கல்வியின் தரம், வழங்கப்படும் வசதிகள், "கைத்தறிக்கு கை கொடுப்போம்" என்ற சமூக சேவை நற்பணி ஆகியவை பற்றி நட்புப்பாலம் நிகழ்ச்சியில் அறிந்தோம். சீன புத்தாண்டை தமிழகத்தில், அதுவும் துணை வேந்தர் திரு. ஜீ. திருவாசகம் அவர்களுடன் இணைந்து கொண்டாடிய அணுபவங்களையும் கேட்டோம். இப்பயிற்சி தேசப்பற்று மிக்க மாணவர்களை உருவாக்கி, சீனாவிற்கு புகழ் சேர்க்கும் என்பதில் எள்ளளவும் ஐய்யம் இல்லை.