• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-25 18:56:51    
திபெத்தில் தீச் சம்பவங்களுக்குக் காரணமான ஐயத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டனர்

cri
சீனப் பொது பாதுகாப்பு அமைச்சகம் இன்று பெய்ஜிங்கில் செய்தியாளர் கூட்டம் நடத்தி, அண்மையில் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான லாசாவில் நிகழ்ந்த தீச் சம்பவங்கள் பற்றிய புலனாய்வு நிலைமையை அறிவித்தது. பல உயிர் இழப்புகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவங்களுக்கு காரணமான ஐயத்துக்குரிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது, மார்சு 14 வன்முறை சம்பவம் கையாளப்பட்டுள்ளது. லாசா நகரின் சமூக ஒழுங்கு அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளது என்று பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் shan hui min அம்மையார் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். சட்டப்படி, இச்சம்பவத்தைக் கையாண்ட போது, காவற்துறையினர்களும், ஆயுதக்காவற்துறையினர்களும் இயன்ற அளவில் கட்டுப்பாடு மற்றும் தெளிந்த சிந்தனையுடன் செயல்பட்டனர். ஆட்கொல்லி ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என்று தெரிய வருகின்றது.

மார்சு திங்கள், லாசா நகரில் அடிதடி,சீர்குலைத்தல்,கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்கள் நிகழ்ந்தன. அவற்றில், லாசா நகரிலுள்ள ஒரு ஆடை விற்பனை கடை மற்றும் Da Zi மாவட்டத்தில் மோட்டர் வாகன கடையில் நிகழ்ந்த தீச் சம்பவங்களில் பல அப்பாவி மக்கள் உயிர் இழந்தனர். சீனப் பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் shan hui min அம்மையார், இந்த வழக்குகளைப் புலனாய்வு செய்யும் நிலைமையை எடுத்து கூறினார். அவர் கூறியதாவது

அண்மையில், லாசா நகரிலுள்ள ஆடை கடை தீச் சம்பவத்குக்குக் காரணமான ஐயத்துக்குரிய 3 நபர்களையும் Da Zi மாவட்டத்தில் மோட்டர் வாகன கடை ஒன்றில் நிகழ்ந்த தீச் சம்பவத்குக்குக் காரணமான ஐயத்துக்குரிய 2 நபர்களையும் லாசா காவற்துறை கைது செய்தது. பூர்வாங்க விசாரணையின் படி, குற்றமிழைப்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றார் அவர்.

மார்சு திங்கள் 14ம் நாள் பிற்பகல், Qime Lhazom, Ben gyi முதலிய 3 பேர், லாசா நகரிலுள்ள ஈ சன் எனும் ஒரு ஆடை கடைக்குச் சென்றனர். அப்போது, இந்த கடையின் கதவு ஏற்கனவே பிற தீவிரவாதிகளால் சீர்குலைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. இந்த 3 பேர் கடையில் 3 முறை தீ மூட்டனர். கடையில் எஞ்சிய ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை தீயில் போட்டனர். தீ மூட்டிய பின், அவர்கள் தப்பிச் சென்றனர். கடையில் உள்ள Tsering Drokar உள்ளிட்ட 5 இளம் பெண்கள் தீயில் கருகி உயிர் இழந்தனர்.

மார்சு திங்கள் 15ம் நாள் இரவு, Loyar என்பவர் Da Zi மாவட்டத்தில் சில சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, Kangzug என்னும் மற்றவருடன், 2 கடைகளுக்கு தீ மூட்டினார். அவற்றில் மோட்டார் வாகன கடையிலுள்ள 5 பேர் உயிர் இழந்தனர். அவர்களில் 8 திங்கள் வயதான குழந்தை ஒன்று அடக்கம்.

shan hui min அம்மையார் கூறியதாவது

தீச் சம்பவங்களுக்கு காரணமான இந்த 5 நபர்கள் சீன சட்டத்தை அத்துமீறியுள்ளனர். மார்சு 14 வன்முறை சம்பவம், அமைதியான ஆர்ப்பாட்டமில்லை. அமைதி எதிர்பார்ப்பு இதில் கொஞ்சம் இல்லை என்று உண்மைகள் நிரூபித்துள்ளன. அவை கடுமையான வன்முறை குற்ற சம்பவங்களாகும் என்றார் அவர்.

மார்சு 14 நிகழ்ச்சி தலாய் லாமா குழுவால் ஏற்பாடு செய்து தூண்டிவிடப்பட்டவை என்று இதில் கலந்து கொண்ட தீவிரவாதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். shan hui min அம்மையார் மேலும் கூறியதாவது

கிளர்ச்சியை உருவாக்குவது, அமைதியை கருப்பொருளாகக் கொண்ட பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியையும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் சீர்குலைப்பது, தாய்நாட்டைப் பிளவுப்படுத்துவது ஆகியவை அதன் இலக்குகளாகும். தீவிரவாதிகளின் மூர்க்கத்தனமான செயல் திபெத்தில் பல்வேறு தேசிய இன மக்களின் பேராத்திரத்தை ஏற்படுத்தி, முழு நாட்டிலும் மக்களின் கண்டனத்தை எதிர்கொண்டது என்றார் அவர்.

இந்த வன்முறை குற்றச் செயல், திபெத்தில் மாபெரும் உயிர் மற்றும் சொத்து இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 18 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். நேரடி சொத்து இழப்பு 30 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.

சம்பவத்தைச் சமாளிக்க, திபெத் தன்னாட்சி பிரதேச அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, சட்டப்படி வன்முறை குற்றச்செயல்களுக்குத் தண்டனை விதித்துள்ளது. 242 காவற்துறையினர்களும், ஆயுதமேந்திய காவல்துறையினர்களும் காயமுற்றனர். ஒருவர் உயிரிழந்தார்.

அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கும், குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிப்பதற்கும் திபெத் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

தற்போது, இந்த இரண்டு தீச் சம்பவங்கள் பற்றிய விசாரணை பணி தொடர்கின்றது என்று தெரிய வருகின்றது.