2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புனிதத் தீபம், நேற்று கிரேக்க ஒலிம்பியா நகரில் ஏற்றப்பட்ட பின், தீபத்தொடரோட்ட நடவடிக்கை துவங்கியுள்ளது.
நேற்று மாலை, இத்தீபம் கிரேக்கத்தின் Mesologi நகரை அடைந்ததோடு, முதல் நாள் மேற்கொண்ட நடவடிக்கை முடிவடைந்தது.
உள்ளூர் நேரப்படி, நேற்றிரவு 8மணி 30 நிமிடத்துக்கு, புனிதத் தீபத்தை வரவேற்கும் வகையில், கிரேக்க ஒலிம்பிக் அமைப்புக் குழுவும் உள்ளூர் அரசும், Mesologi நகரிலுள்ள வீரர் என்ற பூங்காவில் வரவேற்பு விழாவை நடத்தின.
|