திபெத்தின் பாரம்பரிய பண்பாடு, கையேற்றப்பட்டுப் பாதுகாக்கப்பட்டதால், மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளது என்று 20 ஆண்டுகளாக திபெத் பண்பாடு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் நிபுணரும், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சமூக அறிவியல் கழகத்தின் நாட்டுப்புற வழமை பற்றிய ஆய்வகத்தின் ஆய்வாளருமான Tsering Puntsok அண்மையில் எமது செய்தியாளருக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.
கடந்த பல பத்தாண்டுகளாக, திபெத்தின் பாரம்பரிய பண்பாட்டை பாதுகாக்க, சீன அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் மற்றும் சாதனைகள், அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.
கடந்த சில ஆண்டுகளில், அரசு, பண்பாட்டு இலட்சியத்திற்கான ஒதுக்கீட்டை அதிகமாக்கியுள்ளது. திபெத்தில் பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கைகளுக்காக, 20க்கு மேற்பட்ட குழுக்கள், வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டன என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பண்பாட்டு அலுவலகத் தலைவர் Nyima Tsering தெரிவித்தார்.
|