சீன அரசவையின் செய்தி அலுவலகத்தின் ஏற்பாட்டில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்க் குழு, பெய்சிங்கிலிருந்து புறப்பட்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் லாசா சென்று, மார்ச் 14 அடிதடி,சீர்குலைத்தல்,கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்கள் பற்றி, பேட்டி காணும்.
இக்குழு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு 19 ஊடகங்களின் செய்தியாளர்களால் உருவாகியுள்ளது. அவற்றில், Associaled செய்தி நிறுவனம், Wall Street நாளேடு, அமெரிக்கா Today, பிரிட்டன் Financial times, ரஷிய TACC, ஜப்பானிய Kyodo News, தென் கொரிய KBS மற்றும் Qatar தொலைக்காட்சி நிலையங்கள் போன்ற வெளிநாட்டு செய்தி ஊடங்களும், Phoenix தொலைக்காட்சி நிலையம், TVB முதலிய ஹாங்காவின் ஊடகங்களும், கிழக்கத்திய பல்லூடகக் குழு முதலிய தைவானின் ஊடங்களும் அடங்குகின்றன. சீன நாளேடு மற்றும் பெய்சிங் வார இதழின் இரு செய்தியாளர்களும் இச்செய்தியாளர்க் குழுவில் இடம்பெறுகின்றனர்.
அவர்கள், லாசாவில் மூன்று நாள் பேட்டி காண்பார்கள்.
|