திபெத் சுதந்திரம் என்ற உண்மையான உருவத்தை வெளிப்படுத்தும் வகையில், சீனத் தேசிய செய்தி நிறுவனமான சிங்குவா செய்தி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் திபெத்தியல் ஆய்வு நிபுணர்களையும் அறிஞர்களையும் பேட்டி கண்டார். அவர்களின் ஆய்வுகள் மற்றும் கூற்றுகளின் மூலம், தலாய்லாமா குழு, திபெத் சுதந்திரத்துக்காகத் தொடர்ந்து முயன்று வந்துள்ளதை மக்கள் தெளிவாகக் காணலாம். பொது கருத்துக்களைப் பயன்படுத்தி, திபெத் சுதந்திரத்தைப் பிரச்சாரம் செய்து, நாடோடி அரசாங்கத்தை உருவாக்கி, கலவரச் சம்பவங்களைத் தொடர்ந்து உருவாக்குவது, தலாய்லாமா குழுவின் வழக்கமான செயல்லாகும். இது, ஒருபோதும் நின்றபாடில்ல என்று சீனத் திபெத்தியல் ஆய்வு மையத்தின் நிபுணர்களில் பலர் சுட்டிக்காட்டினர். அண்மையில்,லாசா முதலிய இடங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள், தலாயாலாமா குழுவின் தாய்நாட்டைப் பிளவுப்படுத்தும் வன்முறை நடவடிக்கையை மீண்டும் நிரூபித்தன. இது,திபெத் இன உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைத்து சீன மக்களின் அடிப்படைப் பயனுக்கு முழுவதும் புறம்பானது. இது, பலிக்காது என்று சீனத் திபெத்தியல் ஆய்வு மையத்தின் liu hongji நிபுணர் கூறினார்.
|