• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Saturday    Apr 12th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-26 10:50:34    
சீன-இந்திய நட்பு கட்டிடத்தில் வாழும் இன்பமான ஒரு குடும்பம்

cri
சீனாவின் கடற்கரை நகரங்களிலுள்ள தொழில்கள் நிலம் சூழ்ந்த பிரதேசத்துக்கு இடமாற்றம் செய்யப்படும் வளர்ச்சிப் போக்குடன், நிலம் சூழ்ந்த JING XI மாநிலத்தின் தலைநகர் NAN CHANG, உள் நாட்டு வெளிநாட்டு வணிகர்களை வரவேற்க, தனது முதலீட்டுச் சூழலை முழுமைப்படுத்தி வருகிறது. குறிப்பாக 2006ஆம் ஆண்டில் உலகளவில் உயிர்த்துடிப்பு மிக்க 10 நகரங்களில் ஒன்றாக News Week என்ற அமெரிக்க வார இதழால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், மேலதிக அந்நிய நண்பர்களை இந்நகரம் ஈர்த்து வந்துள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் இந்தியக் குடும்பம், NAN CHANG நகரிலுள்ள QIAN XI YUAN என்ற குடியிருப்புப் பகுதியில் வாழ்கிறது. இக்குடும்பம் வாழும் கட்டிடத்தின் பெயர், சீன-இந்திய நட்பு கட்டிடம் ஆகும்.

பச்சை பசேலென்ன புற்கள் நிறைந்து காணப்படும் நிலத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களிலான கட்டிடங்கள். அவற்றில் ஒரு சிறப்பான கட்டிடத்தில் தான், 8 இந்தியக் குடும்பங்கள் வாழ்வதால், சீன-இந்திய நட்பு கட்டிடம் என்று அதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. திரு Gopalkrishnaவின் குடும்பம் அக்கட்டிடத்தில் தான் வாழ்கிறது.

இவ்வாண்டு 38 வயதான Gopalkrishna, 2005ஆம் ஆண்டில் தனது பணியின் நிமித்தம் NAN CHANG நகரம் வந்தடைந்தார். இந்தியாவின் முதலாவது பெரிய நகரான மும்பை அவரது சொந்த ஊராகும். பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய மாநகரங்களுடன் ஒப்பிடுகையில், NAN CHANG நகரம் அவ்வளவு செழுமையாக இல்லை என்ற போதிலும், தனித்தன்மை வாய்ந்த ஈர்ப்பு ஆற்றலை அது கொண்டுள்ளது என்று Gopalkrishna கூறினார்.

ஒலி 1

"NAN CHANG நகரம், பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய மாநகரங்களைப் போன்ற பெரிய நகரம் அல்ல என்ற போதிலும், வாழ்க்கைக்குப் பொருந்திய ஒரு நகரமாகும். இந்நகரத்தில் வாழ்வதால், குடும்பத்தினருடன் இணைந்து இருக்கும் நேரம் அதிகம். இங்குள்ள எங்கள் வாழ்க்கை நன்றாக உள்ளது. இன்னல்களைச் சந்தித்தால், குடியிருப்புப் பகுதியிலுள்ள நண்பர்கள் எங்களுக்கு உதவி வழங்குகிறார்கள்" என்றார் அவர்.

குடும்பத்துக்கு எப்போதும் முக்கியத்துவம் தந்து வரும் Gopalkrishna, தொடக்கத்தில் தனியாக சீனாவுக்கு வந்தார். 2006ஆம் ஆண்டு, மனைவியையும் மகனையும் அவர் NAN CHANG நகருக்கு அழைத்து வந்தார். அவர்கள் இந்நகரில் புதிய வாழ்க்கையைத் துவக்கினர்.

Gopalkrishnaவின் மனைவி நேஹ குல்கார்னி, LI YUE என்ற சீனப் பெயரைக் கொண்டுள்ளார். NAN CHANGகிலுள்ள பிரிட்டன் தொழில் நிறுவனத்தில் அவர் பணிபுரிகிறார். ஒவ்வொரு வாரத்திலும் அவரும் அவரது கணவர் Gopalkrishnaவும் சீன மொழியைக் கற்றுக் கொள்ள NAN CHANG பல்கலைக்கழகத்துக்குச் செல்கின்றனர். வேலைக்கு பிந்தைய ஓய்வு நேரத்தில் பொருட்களை வாங்குவது LI YUEவின் ஆர்வங்களில் ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளில், அந்நிய முதலீட்டு சில்லறை விற்பனை நிறுவனங்கள் NAN CHANG நகரத்தில் கிளைகளை நிறுவியுள்ளன. NAN CHANG நகரத்துக்குள் உலகிலுள்ள பல்வேறு இடங்களின் பொருட்களை வாங்குவது என்பது படிப்படியாக உண்மையாகி வருகிறது.

"NAN CHANG நன்றாக இருக்கிறது, வாழ்க்கைக்குப் பொருந்தியதாக உள்ளது. இந்நகரம் பசுமையாகவும் கண்களுக்கு அழகான காட்சிகளை தரக் கூடியதாகவும் உள்ளது. நாங்கள் வீட்டில் உணவு சமைக்கின்றோம். காய்கறிகளை பேரங்காடியில் வாங்கிக் கொள்கின்றோம். சீன மொழி எனக்கு கொஞ்சம் தெரிகிறது. பெரிய மொழி தடை இல்லை" என்றார் நேஹ குல்கார்னி.

நேஹ குல்கார்னி அம்மையாரைப் பொறுத்த வரை, பேரங்காடியில் பொருட்களை வாங்குவது மட்டும் போதுமானது அல்ல. ஓய்வு நேரத்தில், சிறு சந்தைகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் போது வணிகர்களுடன் எளிதான சீன மொழியில் பேரம் பேசுவது அவருக்கு மகிழ்ச்சி தரக் கூடியதாக இருக்கிறது.

குடும்ப வாழ்க்கையில், Gopalkrishna நல்ல தந்தையாகவும் கணவராகவும் விளங்குகிறார். பணித் துறையில், நல்ல தலைவராக அவர் திகழ்கிறார். திரு XUE YUN KUN, Gopalkrishnaவுடன் இணைந்து வேலை செய்தவராவார். தொலைபேசி மூலம் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது—

"அவர் நான் சந்தித்த முதலாவது மேலாளர். என்னில் முக்கிய தாக்கத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார். மதிப்பு அளிக்கத்தக்க மூத்தவராகவும், அன்றாட நாட்களில் சிறந்த நண்பராகவும் அவர் விளங்குகிறார்" என்றார் அவர்.

தாம் சேர்ந்த நிறுவனமான சீன மகேந்திர இழுவை இயந்திர நிறுவனம் பற்றி குறிப்பிடுகையில், Gopalkrishna பெருமையுடன் கூறியதாவது—

"இந்தியருக்கும் சீனருக்கும் இடையில் பொதுவான அம்சங்கள் அதிகமாக உள்ளன. இந்தியாவின் மக்கள் தொகை அதிகம். அது நீண்டகால வரலாறு கொண்டது. சீனா, பழமை வாய்ந்த நாகரீக நாடாகும். இந்தியாவைப் போன்று பெரிய வேளாண் நாடாகவும் அது விளங்குகிறது. சீன மகேந்திர இழுவை இயந்திர நிறுவனம் சீனாவில் வெற்றி பெறுவதில் ஐயமில்லை" என்றார் அவர்.

Gopalkrishnaவின் மகன் LI XIAO LONG மேலும் முன்னதாக சீனாவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தியுள்ளார். 11 வயதான இந்த ஆண் குழந்தை, சீனாவின் Kong Fu நட்சத்திரம் ஒருவரின் பெயரைக் கொண்டிருக்கிறார். சீனாவுக்கு வரும் முன், இந்தியாவில் 5 ஆண்டுகளாக Wu Shuவைக் கற்றுக் கொண்டுள்ளார். LI XIAO LONG என்ற இந்த சீன மொழி பெயர், அவரது ஆசிரியரால் வழங்கப்பட்டது. Wu Shu துறையில் வல்லுனராக அவர் மாற வேண்டும் என அந்த ஆசிரியர் விரும்புகிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. தற்போது NAN CHANG நகரிலுள்ள இரட்டை மொழி வழி பள்ளியில் LI XIAO LONG கல்வி பயில்கிறார். சீனாவுக்கு வந்து ஓராண்டுக்கு மேலான காலத்தில், எளிதாக சீன மொழியை அவர் கற்றுக் கொள்வது மட்டுமல்ல, சக மாணவர்களுடன் சுமுகமாக பழகுகிறார்.

"இங்குள்ள மக்கள் மிகவும் சிறந்ததாக உள்ளனர். சில சமயம் அவர்கள் எனக்கு சீன மொழியைக் கற்றுக் கொடுக்கின்றனர். எனக்கு தெரியாத போது, சில படங்கள், அடையாளமான பொருட்கள் ஆகியவற்றின் மூலம் எனக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். அவர்களின் உதவியுடன், எளிதான வார்த்தைகளில் சீன மொழியில் நான் கொஞ்சம் பேசலாம். இங்கே எனக்கு சீன நண்பர்கள் அதிகமாக உள்ளனர்" என்றார் LI XIAO LONG.

சீன-இந்திய நட்பு கட்டிடத்தில் வாழும் Gopalkrishnaவின் குடும்பம், தற்போதைய வாழ்க்கை பற்றி மனநிறைவு அடைகிறது. 2 ஆண்டுகளுக்குப் பின், நிறுவனத்துடன் Gopalkrishna கையொப்பிட்ட ஒப்பந்தக் காலம் நிறைவடையும். ஆனால், சீனாவில் வாழ்ந்து வேலை செய்கின்ற நாட்கள் தனது வாழ்வில் மறக்க முடியாத நினைவாகும் என்று அவர் தெரிவித்தார். Gopalkrishnaவின் வீட்டிலிருந்து வெளியேறும் முன், LI XIAO LONG நல்ல சீன மொழியில் செய்தியாளரிடம் கூறியதாவது—

"நான் சீனாவை நேசிக்கின்றேன்" என்றார் அவர்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040