வாணி -- முதல் பகுதியில், கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்கின்றோம்.
க்ளீட்டஸ் -- கடந்த முறை, வாடகைக் கார் பயணம் பற்றிய சில வாக்கியங்களைக் கற்றுக்கொண்டுள்ளோம்.
முதலில் சில பயனுள்ள சொற்கள். 我去,wo qu, 我நான், 去போவது, செல்வது என்ற பொருளாகும். இவை ஒரு வாக்கியத்தில் சேர்ந்து தோன்றினால், நான்...க்குப் போக வேண்டும் என்ற பொருள். என்னைப் பின்பற்றி வாசியுங்கள், 我去,wo qu
க்ளீட்டஸ் -- 我去,wo qu, நான்...க்குப் போக வேண்டும் என்ற பொருள்.
வாணி – அடுத்து, 请打表,qing da biao. 打表,கட்டணக் கருவியைப் பயன்படுத்தல். மீட்டரைப் போடுங்கள். 请打表,qing da biao.
க்ளீட்டஸ் -- 请打表,qing da biao. மீட்டரைப் போடுங்கள்.
வாணி – 我要票。Wo yao piao. எனக்கு ஒரு பற்றுச்சீட்டு வேண்டும். இந்த வாக்கியத்தில் piao என்பது 发票இன் சுருக்கமாகும். 发票,பற்றுச்சீட்டு. ஆகையால், இந்த வாக்கியத்தை வாடகைக் கார் பயணத்துக்குப் பின் மட்டுமல்ல, உணவு விடுதியில் கட்டணம் செலுத்திய பின்னும் பயன்படுத்தலாம்.
க்ளீட்டஸ் --我要票。Wo yao piao. எனக்கு ஒரு பற்றுச்சீட்டு வேண்டும்.
வாணி – வாடகைக் காரில் ஏறிய பின், ஓட்டுநர் தங்களிடம் 您去哪儿?என்பதைக் கேட்கின்றார். நீங்கள் எங்கே போக வேண்டும் என்பது இதன் பொருளாகும். 您去哪儿?nin qu na er?
க்ளீட்டஸ் -- 您去哪儿?nin qu na er? நீங்கள் எங்கே போக வேண்டும்?
வாணி – 我去西单。wo qu xi dan. நான் xi danக்குப் போக வேண்டும். 我去西单。wo qu xi dan.
க்ளீட்டஸ் --我去西单。wo qu xi dan. நான் xi danக்குப் போக வேண்டும்.
வாணி -- 出租车,chu zu che. வாடகைக் கார்.
க்ளீட்டஸ் --出租车,chu zu che. வாடகைக் கார்.
வாணி – புதிய வகுப்பைத் துவக்கலாம். இன்றைய முதலாவது வாக்கியம். 您去哪儿? நீங்கள் எங்கே போக வேண்டும்?您去哪儿?nin qu na er?
க்ளீட்டஸ் --您去哪儿?nin qu na er? நீங்கள் எங்கே போக வேண்டும்?
வாணி --您去哪儿?nin qu na er?
க்ளீட்டஸ் --您去哪儿?nin qu na er? நீங்கள் எங்கே போக வேண்டும்?
வாணி – 我去西单。wo qu xi dan. நான் xi danக்குச் செல்வேன். 西单, ஒரு இடத்தின் பெயர். 我去西单。wo qu xi dan.
க்ளீட்டஸ் --我去西单。wo qu xi dan. நான் xi danக்குச் செல்வேன்.
வாணி –我去西单。wo qu xi dan.
க்ளீட்டஸ் --我去西单。wo qu xi dan. நான் xi danக்குச் செல்வேன்.
வாணி – 您还回来吗? Nin hai hui lai ma? நீங்கள் திரும்பி வருவீர்களா?还,இன்னும் என்ற பொருள். 回来, திரும்புதல். 您还回来吗? Nin hai hui lai ma?
க்ளீட்டஸ் --您还回来吗? Nin hai hui lai ma? நீங்கள் திரும்பி வருவீர்களா?
வாணி – 您还回来吗? Nin hai hui lai ma?
க்ளீட்டஸ் --您还回来吗? Nin hai hui lai ma? நீங்கள் திரும்பி வருவீர்களா?
வாணி — 我还回来,谢谢。Wo hai hui lai, xie xie. நான் திரும்பி வருவேன். நன்றி. 我还回来,谢谢。Wo hai hui lai, xie xie.
க்ளீட்டஸ் --我还回来,谢谢。Wo hai hui lai, xie xie. நான் திரும்பி வருவேன். நன்றி.
வாணி — 我还回来,谢谢。Wo hai hui lai, xie xie.
க்ளீட்டஸ் --我还回来,谢谢。Wo hai hui lai, xie xie. நான் திரும்பி வருவேன். நன்றி.
வாணி – சாலையில் நேரடியாக வாடகை காரை கூப்பிடுவதைத் தவிர, சில சமயங்களில் வீட்டிற்கு அல்லது தங்குமிடத்திற்கு தொலைபேசி மூலம் வாடகை காரை முன்கூட்டியே அழைக்கலாம்.
க்ளீட்டஸ் – ஆமாம். பெரும்பாலான வாடகைக் கார் கூட்டு நிறுவனங்கள் இத்தகைய சேவை புரிகின்றன.
வாணி – தொலைபேசி மூலம் வாடகை காரை அழைப்பது பற்றி இன்று கற்றுக்கொள்ளலாம். கேளுங்கள், 请问,这是出租车站吗?qing wen, zhe shi chu zu che zhan ma? தயவு செய்து, இது வாடகைக் கார் நிலையமா? 站,நிலையம், 出租车站, வாடகைக் கார் நிலையம். 请问,这是出租车站吗?qing wen, zhe shi chu zu che zhan i ma?
க்ளீட்டஸ் –请问,这是出租车站吗?qing wen, zhe shi chu zu che zhan ma? தயவு செய்து, இது வாடகைக் கார் நிலையமா?
வாணி –请问,这是出租车站吗?qing wen, zhe shi chu zu che zhan ma?
க்ளீட்டஸ் –请问,这是出租车站吗?qing wen, zhe shi chu zu che zhan ma? தயவு செய்து, இது வாடகைக் கார் நிலையமா?
வாணி – 是,shi, ஆமாம்.
க்ளீட்டஸ் –是,shi, ஆமாம்.
வாணி – 我要一辆车。Wo yao yi liang che. எனக்கு ஒரு வாடகைக் கார் வேண்டும். 我要一辆车。Wo yao yi liang che.
க்ளீட்டஸ் -- வாணி – 我要一辆车。Wo yao yi liang che. எனக்கு ஒரு வாடகைக் கார் வேண்டும்.
வாணி – 我要一辆车。Wo yao yi liang che.
க்ளீட்டஸ் -- வாணி – 我要一辆车。Wo yao yi liang che. எனக்கு ஒரு வாடகைக் கார் வேண்டும்.
வாணி – இந்த உச்சரிப்பு பயிற்சியில் சீன மொழியில் ஒரு தனிச்சிறப்பு பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். கடந்த பகுதியில் கற்றுக்கொண்ட வாக்கியத்தில் 一辆车 என்ற சொற்கள் இடம்பெறுகின்றன. 一, ஒன்று, 车, கார். இவை பற்றி பல நேயர்கள் அறிந்து கொண்டுள்ளனர். ஆனால், 辆 liang எந்த பொருள்? க்ளீட்டஸ், நீங்கள் சொல்லலாமா?
க்ளீட்டஸ் – இது கஷ்டமான கேள்வி.
வாணி – பரவாயில்லை. எத்தனை பொருட்கள் பற்றி குறிப்பிடும் போது, எண்களுக்கும் பொருளின் பெயருக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட சொல் இடம்பெறுகின்றது. சீன மொழியில் ஒவ்வொரு வகை பொருளுக்கு சமமான சொல் உண்டும். எடுத்துக்காட்டாக, 一个人, ஒரு பேர். 个,என்பது மனிதரை எண்ணிய போது தேவைப்படும் சொல்லாகும். என்னைப் பின்பற்றி வாசியுங்கள். 一个人,yi ge ren.
க்ளீட்டஸ் --一个人,yi ge ren. ஒரு பேர்.
வாணி --一个人,yi ge ren.
க்ளீட்டஸ் --一个人,yi ge ren. ஒரு பேர்.
வாணி – எண்கள் மாறினால், இந்த சொல் மாறாது. 两个人,Liang ge ren, 2 பேர்.
க்ளீட்டஸ் --两个人,Liang ge ren, 2 பேர்.
வாணி – 一座房子。yi zuo fangzi . ஒரு வீடு. 房子,வீடு. 一座房子。yi zuo fangzi .
க்ளீட்டஸ் --一座房子。yi zuo fangzi . ஒரு வீடு.
வாணி --一座房子。yi zuo fangzi .
க்ளீட்டஸ் --一座房子。yi zuo fangzi . ஒரு வீடு.
வாணி – சரி, நேயர்கள், இத்தகைய சொற்களை அடுத்த நிகழ்ச்சிகளில் தங்களுக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்துவோம்.
|