• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-26 09:13:25    
தீப தொடரோட்டத்துக்கான ஆயத்தப் பணி

cri
2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீப தொடரோட்டத்துக்கான ஆயத்தப் பணி, சீராக நடைபெற்று வருகின்றது. ஒலிம்பிக் தீபம், மார்ச் 24ம் நாள் ஏதென்ஸ் ஒலிம்பியாவில் ஏற்றப்படும்.

தற்போது, தீப தொடரோட்டத்தின் நெறி மற்றும் தீபத்தை ஒப்படைக்கு வடிவம், நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தீப தொடரோட்டத்தில் பங்குகொள்கின்றவர்களின் தேர்வுப் பணி, ஒழுக்கான முறையில் நடைபெற்று வருகிறது. 16 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் அதற்கான நபர்களை தேர்ந்தெடுக்கும் பணியை முடித்துவிட்டு, தீபத்தை ஏற்றுகின்றவர்களின் பெயர்ப் பட்டியல்களை ஒப்படைத்துள்ளன.
நாங்கள் கிரேக்க நாட்டை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
கிரேக்கம், ஐரோப்பாவின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. அதன் பரப்பளவு ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 957 சதுர கிலோமீட்டராகும். மக்கள் தொகை சுமார் ஒரு கோடியே 9 இலட்சத்து 64 ஆயிரத்து 20 ஆகும். கிரேக்கத்தின் தலைநகரான Athensஇன்

மக்கள் தெகை 31 இலட்சத்து 92 ஆயிரத்து 606ஆகும். 1896ம் ஆண்டு Athensனில், முதலாவது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெற்றது. 14 ஒலிம்பிக் குழுவின் உறுப்பு நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 241 வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். அமெரிக்க உயரம் தாண்டும் வீரர் James Connolly முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் முதலாவது சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளார். 100 ஆண்டுகளுக்கு பின், 2004ம் ஆண்டு, Athens, 28வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை வெற்றிகரமாக நடத்தியது. 24ம் நாள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதமான தீப்பிழம்பு, கிரேக்க பண்டைக்கால ஒலிம்பிய

சிதிலத்திலிருந்து ஏற்றப்பட்டது. 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் முழு உலக தீபத் தொடரோட்ட துவக்கத்தை இது கோடிட்டுக்காட்டியது.
சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் குழுவின் மருத்துவவியல் ஆணையம், உள்ளூர் நேரப்படி 17ம் நாள், பெய்ஜிங் காற்றுத் தரத்துக்கான தொடர்புடைய ஆய்வு மற்றும் மதிப்பீடுகளை வெளியிட்டது. ஆகஸ்ட் திங்கள் கால பெய்ஜிங் காற்றுத் தரம், அடிப்படையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காது என்று அது கருதுகிறது.

முந்தைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகலைப் போன்று, காற்றுத் தரத்தின் இடர்ப்பாட்டைக் குறைத்து, விளையாட்டு வீரர்களின் உடல் நலத்தைப் பாதுகாக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வதை நாம் உத்தரவாதம் செய்வோம் என்று இவ்வாணையத்தின் தலைவர் Arne Ljungqist அறிக்கையில் தெரிவித்தார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் காலத்தில், பெய்ஜிங் காற்றுத் தரம் மேலும் மேம்படுத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு நம்புவதாகவும் அவர் கூறினார்.