• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-26 09:14:44    
காதல் மரங்கள்

cri
சுங் நாட்டில் இளவரசன் காங்கின் பணியாளர்களில், அரண்மனை சேவர்களில் ஒருவன் ஹான் பிங். ஹெ குடும்பத்தை சேர்ந்த அழகிய பெண்ணை ஹான் பிங் மணமுடித்தான். பேரழகு கொண்டவளாகிய ஹான் பிங்கின் மனைவியின் வனப்பில் மயங்கிய இளவரசன் காங், அவளை ஹான் பிங்கிடமிருந்து அபகரித்து தனதாக்கிக் கொண்டான். கோபம் ஒரு புறம், சோகம் மறுபுறமுமாய் இளவரசன் காங்கிடம் சென்று தன் மனைவியை இளவரசன் அபகரித்தை பற்றி முறையிட்டான் ஹான் பிங். அரச குடும்பம் எங்கே அதற்கு சேவை புரியும் ஒரு எளியவனான ஹான் பிங் எங்கே. ஆக ஏழையில் கூக்குரம் அம்பலமேறவில்லை. நியாயம் கேட்க வந்த ஹான் பிங்கை சிறையிலடைத்து, நகரத்தின் அரணை செப்பனிடுமாறு கடுங்காவல் தண்டனை விதித்தான். இந்நிலையில் ஹான் பிங்கின் மனைவி ஹான் பிங்கிற்கென ஒரு ரகசிய தகவலை எழுதினாள். ஆனால் அந்த ரகசிய கடிதம் இளவரசனின் கைகளுக்கு சிக்கியது. கடிதத்தை பார்த்து அதிலிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல் விழித்தான் இளவரசன்.
"மழை, விடாத மழை
ஆறோ அகன்றது, ஆற்றுன் வெள்ளமோ ஆழமானது,
இருப்பினும் என் உள்ளத்தில் கதிரவனின் ஒளி"
என்று எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தை தனது அரண்மனையிலிருந்தவர்களிடம் கொடுத்து விளக்கம் கேட்டான் இளவரசன். யாருக்கும் அதற்கு பொருள் சொல்ல தெரியவில்லை. இறுதியில் அமைச்சர் சூ ஹெ அந்த கடிதத்தை வாங்கி படித்து அதிலிருந்த வார்த்தைகளுக்கான பொருளை விளக்கினார்.
"இந்த கடிதத்திலுள்ள முதல் வரியிலுள்ள சொற்கள், ஹான் பிங் மீதான அவளது நீங்காத ஏக்கத்தை சொல்கின்றன. இரண்டாவது வரி, அவர்கள் இருவரும் சந்திக்க வாய்ப்பில்லாததை குறிக்கிறது. மூன்றாவது வரி, அவள் தன் உயிரை மாய்த்துக்கொள்ள உள்ளதை கூறுகிறது" என்றார் அமைச்சர்.
இதனிடையில் ஹான் பிங் தன் உயிர் நீக்கி மாண்டான்.
இதை அறிந்த அவளது மனைவி ரகசியமாய் தன் ஆடைகளை கிழித்து, இளவரசனுடன் அரண்மனையின் கோபுரத்துக்கு செல்கையில் மேலிருந்து கீழே குதித்தாள். அவளுடன் இருந்தவர்கள் அவளை பிடிக்க முயன்று அவளது ஆடையை பிடித்தபோது, அது தனியே கழன்றறு அவர்களது கைகளோடு வந்தது. கீழே மோதி உயிர் விட்டாள் ஹான் பிங்கின் மனைவி. அவளது இடுப்பில் ஒரு கடிதம் இருந்தது. அதில் " மதிப்பிற்குரிய இளவரசரே, நீங்கள் நான் வாழ்வேண்டும் என்று விரும்பினீர்கள். ஆனால் உங்கள் பணியாள் சாகவே முடிவெடுத்தேன். தயை கூர்ந்து என்னை என் கணவர் ஹான் பிங்குடன் சேர்த்து அடக்கம் செய்யுங்கள்" என்று எழுதியிருந்தது.
இளவரசனுக்கு நடந்ததையெல்லாம் எண்ணி கோபம் தலைக்கேறியது. ஹான் பிங்கின் மனைவி கோரியதை போல் அல்லாமல் அவளையும் ஹான் பிங்கையும் தனித்தனியே அடக்கம் செய்த இளவரசன், "சாகாத காதலை பற்றி சொல்கிறாயோ. இந்த இரு கல்லறைகளும் ஒன்றாகச் செய்தால், இனி உங்களுக்கு குறுக்கே நான் நிற்க மாட்டேன்" என்று பொறுமினான்.
ஆனால் ஹான் பிங்கும் அவளது மனைவியும் தனித்தனியே அடக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளே, இரு கல்லறைகளிலிருந்தும் இரண்டு பெரு மரங்கள் முளைத்திருந்தன. பத்தே நாட்களில் அவை பிரம்மாண்டமாய் வளர்ந்து கிளைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து, அவற்றின் வேரும் ஒன்றோடு ஒன்று நெருங்கி பின்னிப்பிணைந்தன. இந்த மரங்களின் மேல் இரு காதல் பறவைகள் பகலும் இரவும் சோகமாய் கூவிக்கொண்டிருந்தன. இதையெல்லாம் பார்த்த சூ நாட்டு மக்கள் ஹான் பிங் மற்றும் அவனது மனைவியின் காதலையும், அவர்கள் இறந்த சோகத்தை நினைத்து வருந்தினர். அவர்களது கல்லறையின் மேலிருந்த இரு மரங்களும் பின்னாளில் காதல் மரங்கள் என்று அழைக்கப்படலாயின. இந்த பறவைகள் ஹான் பிங் மற்றும் அவனது மனைவியின் ஆன்மா என்றும் மக்கள் கருதினர். சுய்யாங்கில் ஹான் பிங் என்ற ஒரு நகரம் தற்போது உண்டு. இன்றளவும் இந்த காதலர்களை பற்றிய பாடல்கள் மக்களிடையே பாடப்பட்டு வருவதாக தெரிகிறது.