லாசாவில் நிகழ்ந்த மார்சு 14 சம்பவம், தலாய் லாமா குழு ஒரு சில தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டு, சமூக அமைதியைச் சீர்குலைத்து, திபெத் சுதந்திரத்தை நனவாக்குவதற்காக மேற்கொண்ட ஒரு வழிமுறையாகும். சீனத் திபெத்தியல் ஆய்வு மையத்தின் நிபுணர் இன்று பெய்ஜிங்கில் சீன மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில் இவ்வாறு கூறினர்.
சீனத் திபெத்தியல் ஆய்வு மையம் 1986ம் ஆண்டு பெய்ஜிங்கில் நிறுவப்பட்டது. இம்மையம் திபெத் தன்னாட்சி பிரதேசம் மற்றும் இதர திபெத் பிரதேசங்களின் வரலாறு, தற்கால நிலைமை, எதிர்கால வளர்ச்சி ஆகியவை பற்றி ஆராயும் அறிவியல் ஆய்வு நிறுவனமாகும். இன்று இம்மையத்தைச் சேர்ந்த 4 திபெத்தியல் நிபுணர்கள் பெய்ஜிங்கில் செய்தியாளர் கூட்டம் நடத்தினர். இந்த வன்முறை சம்பவத்தின் பின்னணி பற்றி இம்மையத்தின் தலைமை இயக்குநர் லாபா பின்சோக் கூறியதாவது
அரசும் மதமும் கூட்டாக ஆட்சி புரியும் அரசியல் அமைப்புமுறையை மீட்பது அவர்களின் நோக்கமாகும். முன்பு, நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையின் போது, திபெத்தில் 95 விழுக்காட்டு மக்கள் அடிமைகளாக இருந்தனர். திபெத்தில் இத்தகைய மிக பின்தங்கிய முற்றுமை நிலைமை ஒழிக்கப்பட்டது. இது குறித்து, பிரிவினையாளர்கள் மன வருத்தம் அடைகின்றனர். கூறப்படும் திபெத் சுதந்திரம் என்பது, திபெத்தின், முந்தைய அரசும் மதமும் கூட்டாக ஆட்சி புரியும் அரசியல் அமைப்புமுறையையும் அடிமை அமைப்புமுறையையும் மீட்பதேயாகும் என்றார் அவர்.
கடந்த நூற்றாண்டின் 50ம் ஆண்டுகளில், திபெத் தலாய் லாமாவின் ஆட்சியில், நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையை நடைமுறைப்படுத்தியிருந்தது. 95 விழுக்காட்டுக்கு மேற்பட்ட திபெத் மக்கள் உற்பத்தி வசதி, தனி மனித சுதந்திரம் ஆகியவை இல்லாத நிலையில் துயருடன் வாழ்ந்தனர். அதிகாரிகள், பிரபுக்கள், மேல் நிலை துறவிகள் ஆகிய 3 தலைமை பீடங்கள், திபெத்தில் ஆட்சி புரிந்தன. அவர்கள் அனைத்து உற்பத்தி சொத்துக்களையும் அடிமைகளையும் கொண்டிருந்தனர். 1951ம் ஆண்டு, திபெத் அமைதியாக விடுதலை பெற்றது. அமைதி உடன்படிக்கையின் படி, திபெத்தில் சீர்திருத்த விவகாரங்கள், திபெத் உள்ளூர் அரசினால் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்கள் இத்தகைய கோரிக்கை விடுத்தால், திபெத் தலைவர்களுடன் விவாதித்து செயல்பட வேண்டும். நாளுக்கு நாள் தீவிரவாகிய மக்களின் ஜனநாயக சீர்திருத்த கோரிக்கையின் குரலில், அடிமை அமைப்புமுறையை பேணிக்காக்க, 1959ம் ஆண்டு மார்சு 10ம் நாள், தலாய் லாமா குழு இராணுவ கிளர்ச்சியை மேற்கொண்டது. இம்முயற்சி தோல்வியுற்ற பின், 14வது தலாய் லாமா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார்.
லாசாவில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில், கடும் உயிர் மற்றும் சொத்து இழப்பு ஏற்பட்டது. திபெத்தியல் ஆய்வு மையத்தின் நிபுணர் சென் தூய் கூறியதாவது
Han, Hui, திபெத் ஆகிய இன மக்கள் இவ்வன்முறையால் பாதிக்கப்பட்டனர். எனவே, இச்சம்பவங்கள், தேசிய இன முரண்பாடோ, மதப் பிரச்சினையோ அல்ல, அரசியல் பிரச்சினையாகும். தேசிய இன ஒன்றிணைப்பைச் சீர்குலைத்து, தாய்நாட்டை பிளவுபடுத்தும் வகையில், ஒரு சிலர் அந்தரக்க நோக்கத்துடன், கூறப்படும் தேசிய இன முரண்பாடு என்ற சாக்குபோக்கை பயன்படுத்துகின்றனர் என்று இவ்வன்முறை எடுத்துக்காட்டியது என்றார் அவர்.
புள்ளி விபரங்களின் படி, திபெத் பொருளாதாரம், தொடர்ந்து 7 ஆண்டுகளாக, 12 விழுக்காட்டுக்கு மேல் என்ற வேகத்தில் அதிகரித்து வந்துள்ளது. விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி ஆண்டு வருமானம், தொடர்ந்து 5 ஆண்டுகளாக 10 விழுக்காட்டுக்கு மேல் என்ற நிலையில் அதிகரித்து வந்துள்ளது. இது பற்றி, சீன திபெத்தியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த திபெத் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான நிபுணர் Tanzen Lhundrup கூறியதாவது:
சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட 30 ஆண்டுகளில், அடிப்படை வசதிகள், மக்களின் வாழ்க்கை, மருத்துவசிகிச்சை, கல்வி முதலிய துறைகளில், திபெத் உண்மையான நலனையும் வளர்ச்சியையும் பெற்றுள்ளது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் சாதனைகளை திபெத் மக்கள் முழுமையாக அனுபவிக்கின்றனர் என்பதை பல உண்மைகள் நிரூபித்துள்ளன என்று அவர் கூறினார்.
தலாய் லாமா குழு, திபெத் சுதந்திர நடவடிக்கையை மேற்கொள்வது என்பது, திபெத் மக்களின் விருப்பத்துக்கு முரணானது என்றும் அவர் லியுறுத்தினார்.
|