தொடர்புடைய நாடுகள், தாலாய் லாமா குழுவுக்கு எந்த வடிவங்களிலான ஆதரவையும் அளிக்க வேண்டாம் என்று சீனா விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் qin gang நேற்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
அண்மையில், லாசா நகரில் நிகழ்ந்த வன்முறை குற்றங்கள் குறித்து, qin gang செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது இவ்வாறு தெரிவித்தார்.
இப்பிரச்சினையில் சீன அரசின் நிலைப்பாட்டுக்கு, 100க்கு மேலான நாடுகள், புரிந்துணர்வும் ஆதரவும் தெரிவித்ததோடு, இந்த வன்முறை செயல்களையும் அந்நாடுகள் கண்டித்தன. திபெத், சீனாவின் ஒரு பகுதியாகும் என்று ஏற்றுகொண்டன. சீன அரசு, சட்டப்படி, சமூக நிதானம், சட்ட ஒழுங்கு, பொது மக்களின் அடிப்படை நலன் ஆகியவற்றை பேணிகாப்பதற்கு அவை ஆதரவு அளித்தன என்று அவர் தெரிவித்தார்.
|